தெய்வப் பக்தி உங்களுக்குத்தான் இருக்கா..? பாஜகவை விளாசி தள்ளிய கார்த்தி சிதம்பரம்..!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 7:36 PM IST
Highlights

தெய்வப் பக்தி என்பது பாஜகவினருக்கானது மட்டுமே கிடையாது. அது அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்டு என்று சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 

கார்த்தி சிதம்பரம் பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சீமான் பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பற்றியும் கொச்சையாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எந்தக் கொள்கை பிடிப்புமே இல்லாத சீமான், இளைஞர்கள் மத்தியில்  கோபத்தை தூண்டிவிடுகிறார். அதன்மூலம் சொற்ப வாக்குகளை பெறுகிறா. அவருடைய கட்சி தமிழக மக்கள் நலனுக்கான திட்டங்களை வைத்து நடத்தும் அரசியல் கட்சியே கிடையாது. அது ஒரு பிரின்ஸ் அவுட் புட் கட்சி.


யாருமே அரசியல் ரீதியாக விமர்சனம் வைத்தால் அதை ஏற்றுக் கொள்வோம். காங்கிரஸ் தலைவர்களை சீமான் விமர்சிப்பதைக் கண்டிக்கிறேன். இதுபோன்ற பேச்சுக்கள் மூலம் அவர் தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்கிறார். காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிக்க சீமானுக்கு அருகதை இல்லை. வருங்காலத்தில் அவருடைய கட்சிக்கு கிடைக்கும் சொற்ப வாக்குகள் கூட கிடைக்காம தமிழக மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள். அதுதான் அவருக்கு உண்மையான தண்டனையாக இருக்கப்போகிறது. 
இந்து மதத்துக்கு திமுக எதிரான கட்சி என்று பாஜக தொடர்ந்து  விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால்தான் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்த பிறகு கோயில்களை  திறக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். பாஜகவை விரும்பத்தகாத கட்சியாகத்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பாஜகவின் அரசியல் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. தெய்வ பக்தி என்பது பாஜகவினருக்கானது மட்டுமே கிடையாது. அது அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்டு.  நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

click me!