
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட தொண்டர் ஒருவரது இல்ல திருமண விழாவிற்கு வந்த அன்புமணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள பிரபல இருதய மருத்துவமனையான நாராயணா இருதயாலையா வில் அனுமதிக்க பட்டார்.
இந்நிலையில் இன்று பாமக தலைமை அன்புமணி நலமுடன் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
"பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேற்று காலை தருமபுரி தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஓய்வின்றி தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் அவருக்கு சோர்வும், லேசான தலைச்சுற்றலும் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரிலுள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அவருக்கு முழுமையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்பதும், உடல்நிலை இயல்பாக இருப்பதும் தெரியவந்தது. எனினும், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
அதன்படி இன்று ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நாளை இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்."