அரிவாள் தூக்கிய வைகோ..!!! - சொந்த ஊரில் சுகாதாரம்

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அரிவாள் தூக்கிய வைகோ..!!! - சொந்த ஊரில் சுகாதாரம்

சுருக்கம்

மதிமுக பொது செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் தானே முன் நின்று இறங்கி கருவேல மரங்களை அகற்றினார்.

தமிழகத்தை பெரிதும் பாதிக்கும் சுற்றுசூழல் விசயங்களில் கருவேல மரமும் ஒன்று. இதை அகற்ற வேண்டும் என்று பலரும் நீதிமன்ற வாயிலாக போராடி வருகிறனர்.

மதிமுக பொது செயலாளர் வைகோ இதில் முன்னனியில் இருக்கிறார்.

சமீபத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய வைகோ சீமை கருவேல மரங்களை அகற்ற வேடனும் என்று கோரிக்கை வைத்தார்.

சமீபத்தில் நீதிமன்றம் உடனடியாக கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உடனடியாக கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொண்டர்களுடன் தானே நேரடியாக களமிறங்கினார்.

கருப்பு பேண்டும் கருப்பு சிவப்பு வரிகள் போட்ட டீ-ஷர்ட்டும் அணிந்து கையில் அரிவாளுடன் வைகோ நேரடியாக களத்தில் இறங்கி கருவேல மரங்களை அகற்றினார்.

அவரது இந்த முயற்சிக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தனர்.

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்