ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்..! ஆளுநர் இனி தாமதிக்க கூடாது..! உடனே ஒப்புதல் அளிக்கனும்- அன்புமணி

By Ajmal KhanFirst Published Mar 23, 2023, 2:59 PM IST
Highlights

பா.ம.கவின் வலியுறுத்தலை ஏற்று சட்ட முன்வரைவை அரசு  மீண்டும்  தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த சட்ட முன்வரைவுக்கு தமிழக ஆளுனர் தாமதிக்காமல் உடனடியாக  ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அப்போதையை அதிமுக மற்றும் திமுக அரசு சார்பாக சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் இந்த மசோதா நிறைவேற்ப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அணைத்து கட்சிகளின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.  இந்தநிலையில், இது தொடர்பாக டுவிட்டர் வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இனியும் ஆளுநர் காலம் தாழ்த்துவது நல்லதல்ல.. உடனே ஒப்புதல் கொடுங்க.. டிடிவி.தினகரன்.!

ஆளுநர் ஒப்புதல் அளிக்கனும்

தற்போது நடைபெற்று வரும் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படவிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. சட்டமுன்வரைவு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது! பா.ம.கவின் வலியுறுத்தலை ஏற்று சட்ட முன்வரைவை அரசு  மீண்டும்  தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த சட்ட முன்வரைவுக்கு தமிழக ஆளுனர் தாமதிக்காமல் உடனடியாக  ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

உருக்கமாக பேசிய முதல்வர்.. மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..!
 

click me!