சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்படாமல் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தப்படுவது ஏன்.? இது என்ன நியாயம்- அன்புமணி

By Ajmal Khan  |  First Published Apr 2, 2023, 7:41 AM IST

அனைத்துத் தரப்பினரையும்  பாதிக்கும் சுங்கக்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். 
 


சுங்க கட்டணம் உயர்வு

சுங்க கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் 10% வரை  உயர்த்தப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை எந்த வகையிலும் மேம்படுத்தாமல் ஆண்டுக்கு ஆண்டு   சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. சுங்கக்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது! இந்தியாவின் ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளில் 10 விழுக்காட்டுக்கும் மேல் தமிழகத்தில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 6606 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளில் 5134 கி.மீ சாலைகளுக்கு, அதாவது 77% சாலைகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தேசிய சராசரியான 20% விட 4 மடங்கு அதிகம்! சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்துத் தரப்பினரும்  கடுமையாக பாதிக்கப்படுவார்கள்!

Latest Videos

எடப்பாடி பழனிசாமியை பாகுபலியாக மாற்றிய அதிமுகவினர்

கட்டண உயர்வு-திரும்ப பெற வேண்டும்

 60 கிமீக்கு ஒரே சுங்கச்சாவடி, தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகளில் 31.03.2023ஆம் தேதியுடன்  சுங்கக்கட்டணம் 40% குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்த நிலையில், அவை எதுவும் செயலுக்கு வரவில்லை; ஆனால், கட்டணம் மட்டும் உயருகிறது. இது என்ன நியாயம்? சுங்கச்சாவடி சீர்திருத்தங்களை செய்யாமல், சாலைகளை மேம்படுத்தாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்துவதை  ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் - அமைச்சர் எ.வா. வேலு அறிவிப்பு

click me!