அன்புமணி தாடி ரகசியம் என்ன தெரியுமா ? அவரே வெளியிட்ட தகவல் !!

Published : Sep 21, 2018, 09:04 AM IST
அன்புமணி தாடி ரகசியம் என்ன தெரியுமா ?  அவரே வெளியிட்ட தகவல் !!

சுருக்கம்

எனது மகளின் ஆசைக்காக நான் தாடி வைத்துள்ளளேன் என்றும் இதில் வேறு எந்த ஒரு ரகசியமும் இல்லை எனவும்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் ரொம்ப ஸ்மார்ட் ஆனவர் என பெயரெடுத்தவர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். அது மட்டுமல்லாமல் குடும்பத்தின் மீதும், தொண்டர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். அவர் எப்போதுமே நன்றாக ஷேவ் பண்ணி, தூய்மையாகவும், ஸ்மார்டாகவும் இருப்பார். ஆனால் தற்போது அவர் கருகரு என தாடி வைத்துள்ளார்.

இந்நிலையில் காவிரி உபரிநீரை கடலில் கலக்கி வீணாக்காமல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி  10 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கி வைத்தார் அன்புமணி ராமதாஸ்.

தர்மபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கையெழுத்து போட்டனர். 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்ற பின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனுவாக அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, உபரிநீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவதன் மூலம், விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்.

இதைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தான் தான் கொண்டு வந்ததாக அன்புமணி பேசினார்.

தற்போது அன்புமணி ராமதாஸ் தாடி வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என எனது மகள் ஆசைப்பட்டார். அவரது ஆசைக்காக தாடி வளர்த்துள்ளதாக கூறி, தான் தாடி வைத்துள்ள ரகசியத்தை உடைத்தார்.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..