கணைய அழற்சி நோயால் அவதிப்படும் மனோகர் பாரிக்கர்… குணமடைய வேண்டி பாஜக அலுவலகததில் இஸ்லாமியர்கள் தொழுகை..நெகிழ்ச்சி சம்பவம்…

Published : Sep 20, 2018, 09:13 PM IST
கணைய அழற்சி நோயால் அவதிப்படும் மனோகர் பாரிக்கர்… குணமடைய வேண்டி பாஜக அலுவலகததில் இஸ்லாமியர்கள் தொழுகை..நெகிழ்ச்சி சம்பவம்…

சுருக்கம்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி  புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டி இஸ்லாமிய மவுலானாக்கள் கோவா பாஜக அலுவலகத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டது, மத வேறுபாடுகளை கடந்த நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது.  

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்குர்  கடந்த பிப்ரவரி மாதம் முதல்  கணைய அழற்சி புற்று நோய் காரணமாக, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். சில நாட்கள் அரசுப் பணிகளைக் கவனித்து வந்த நிலையில் மீண்டும்  அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அங்கிருந்து நாடு திரும்பிய பாரிக்கர், மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கணைய அழற்சி நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாரிக்கர் குணமாக வேண்டி பல்வேறு கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் கோவா பாஜக அலுவலகத்தில் கோவா முதலமைச்சர்   மனோகர் பாரிக்கர் விரைவில் குணமாக வேண்டி, முஸ்லிம் மவுலானாக்கள்  சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த 10 முஸ்லிம் மவுலானாக்கள், பாரிக்கர் விரைவில் குணமாக வேண்டும் என்று 'குர்ஆன் கவானி' எனப்படும் புனித குர்ஆன் வாசிப்பை நடத்தினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!