மீண்டும் தலைவரானார் அன்புமணி..! நீக்கமும் சேர்ப்பும்..!

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 05:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
மீண்டும் தலைவரானார் அன்புமணி..! நீக்கமும் சேர்ப்பும்..!

சுருக்கம்

anbumani again leader for badminton association

தமிழ்நாடு இறகுப் பந்து சங்கத்தின் தலைவராக மீண்டும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு இறகுப் பந்து சங்கத்தின் தலைவராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், அன்புமணியை அப்பதவியிலிருந்து விலக்குவதாக இறகுப்பந்து சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சங்க விதிகளை மீறி அன்புமணி செயல்பட்டதாக நிர்வாகிகள் புகார் கூறினர். அரசியல்வாதியை தலைவராக ஏற்றுகொண்டால் சங்கத்திற்குள் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டது. செயற்குழு கூட்டத்தின் போது துப்பாக்கி ஏந்திய நபருடன் வந்து பேசினார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக நிர்வாகிகள் சிலரை நீக்கினார்.

அவரிடம் ஒப்படைக்கப்பட்ட லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் காணமால் போய் உள்ளன. பல விசயங்களில் சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டார். அவர் தலைவராக நீடித்தால் சங்கத்திற்குள் வெளிப்படைதன்மை இருக்காது என்று புகார் கூறிய நிர்வாகிகள், தீர்மானம் நிறைவேற்றி அன்புமணியை நீக்கினர்.

இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அன்புமணி மீண்டும் அச்சங்கத்திற்கு தலைவராக்கப்பட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?