12 ஆம் வகுப்பு தேர்வை 50ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்தது ஏன்..? சட்டப்பேரவையில் அதிமுக கேள்விக்கு அமைச்சர் பதில்

By Ajmal Khan  |  First Published Mar 24, 2023, 12:36 PM IST

பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை மாதம் நடைபெற உள்ள துணை தேர்வில் தேர்வு எழுத வைப்பதற்காக  மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்களை தொடர்பு கொண்டு தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


50ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது ஏன்.?

சட்டப்பேரவையில் இன்று நேரம் இல்லாத நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், பள்ளியில் 10, 11, 12-ம் மாணவர்களுக்கு செயலி மூலம், அவர்களுக்கு ஹால் டிக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது இவ்வளவு பேர் 12 ஆம் வகுப்பு  தேர்வு எழுதவில்லை என்பதை தமிழக அரசு கணக்கில் கொள்ள வேண்டும். 75% வருகைப்பதிவு மட்டுமே தேர்வுக்கு அனுமதி என்று நிலை உள்ளது.  கடந்த கொரோனா காலத்தில் 20000 பேர் எழுதாத நிலை இருந்த நிலையில் தற்போது சஜக நிலையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என குற்றம் சாட்டினார்.

Latest Videos

ஆருத்ரா நிதி நிறுவன பல கோடி மோசடி..! பாஜக மாநில நிர்வாகி அதிரடியாக கைது

சட்டபேரவையில் கவன ஈர்ப்பு

இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசினார்.  2020-21ல் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.. அதன் தொடர்ச்சியாக அவர்கள் 2021-22 ல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 51 மாணவர்கள் பதிவு செய்து அதில் 41 ஆயிரத்து 306 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. கடந்தாண்டு 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83,811 பேர் தோல்வியடைந்தனர்.  அதன் தொடர்ச்சியாக 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். 

ஜூலை மாத தேர்வு எழுத நடவடிக்கை

அவர்களில் 78 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமலே போயிருப்பார். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்து 11ம் வகுப்பு தேர்வு எழுதி சுமார் 50,000 மாணவர்கள் தேர்ச்சி பெற வைத்துள்ளோம். இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை மாதம் நடைபெற உள்ள துணை தேர்வில் தேர்வு எழுத வைப்பதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அதிகாரி தலைமையிலான குழு மூலமாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்களை தொடர்பு கொண்டு தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்? அண்ணாமலை அமித்ஷாவிடம் கூறினாரா? அவரே சொன்ன தகவல்..!

click me!