கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளிப்பதா அல்லது தனித்து போட்டியிட்டு தேர்தல் களத்தை எதிர்கொள்வதா என்பது குறித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
அதிமுக- பாஜக மோதல்
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த வரை பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் பிரச்சார களத்தில் மோடியா அல்லது இந்த லேடியா என இந்தியாவே அதிரவைக்கும் அளவில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மறைந்தபிறகு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் இபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டணி அமைத்தனர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்தது. தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இபிஎஸ்- அண்ணாமலை கருத்து மோதல்
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை தனித்து போட்டி என அண்ணாமலை ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்தார். இதனையடுத்து டெல்லிக்கு சென்று தேசிய தலைவர்களிடமும் தனது கருத்தை தெரிவித்தார். ஆனால் மத்தியில் உள்ள தலைவர்களோ தமிழகத்தில் அதிமுகவுடன் தான் கூட்டணி என கூறி அண்ணாமலையை திருப்பி அனுப்பியது. இந்தநிலையில் அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அவர் தொடர்பான கேள்வியை தன்னிடம் கேட்க வேண்டாம் என எரிச்சல் அடைந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும்,
கர்நாடக தேர்தலில் தனித்து போட்டியா.?
கர்நாடாகவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அதிமுக எம்பி தம்பிதுரை அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து கர்நாடக தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாஜகவின் மூத்த நிர்வாகிகளுக்கே கர்நாடாகவில் போட்டியிட சீட் ஒதுக்காத காரணத்தால் அதிமுகவிற்கு தொகுதி வழங்கப்படுமா என்பது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் பாஜகவிற்கு ஆதரவளிப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என இரண்டு முடிவுகளில் ஒரு முடிவை இன்று நடைபெறவுள்ள அதிமுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்