அஞ்சு மணி நேரத்தில் அசத்திய அமுதா ஐஏஎஸ்… ஓடி.. ஓடி.. கருணாநிதியின் இறுதிச்சடங்கு வேலைகளை முடித்த அதிகாரிக்கு குவியும் பாராட்டு !!

Published : Aug 10, 2018, 10:45 PM ISTUpdated : Sep 09, 2018, 07:16 PM IST
அஞ்சு மணி நேரத்தில் அசத்திய அமுதா ஐஏஎஸ்… ஓடி.. ஓடி.. கருணாநிதியின் இறுதிச்சடங்கு வேலைகளை முடித்த அதிகாரிக்கு குவியும் பாராட்டு !!

சுருக்கம்

அஞ்சு மணி நேரத்தில் அசத்திய அமுதா ஐஏஎஸ்… ஓடி.. ஓடி.. கருணாநிதியின் இறுதிச்சடங்கு வேலைகளை முடித்த அதிகாரிக்கு குவியும் பாராட்டு !!

கருணாநிதியின் உடலை எங்கு அடக்கம் செய்வது ? அண்ணா நினைவிடத்தில் இடம் தர முடியாது என எடப்பாடி அரசு கைவிரித்து விட்டது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள். எப்படியாவது அண்ணா நினைவிடத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் முழு முயற்சியை மேற்கொண்டனர்.

வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. கடுமையான விவாதங்கள்.. ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலை வைத்துக் கொண்டுஇ ஸ்டாலின் திண்டாடிக் கொண்டிருந்தார். மாலை அடக்கம் என்று அறிவித்தாயிற்று. ஆனால் எங்கு என்பது முடியாகவில்லை. திமுகவினர் அனைவரும் டென்ஷனின் உச்சத்தில் இருந்தனர்.

சரியாக 11 மணிக்கு கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள். அந்த துக்கத்திலும் திமுகவினரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

இதையடுத்து அடக்கம் செய்வதற்கான பணி ஐஏஎஸ் அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் ஐந்தே மணி நேரம்தான் இருந்தது. அதற்குள் அனைத்து வேலைகளையும் முடித்தாக வேண்டும். மின்னல் வேகத்தில் வேலைகளைத் தொடங்கினார் அமுதா ஐஏஎஸ்.

இது குறித்து பேசிய அமுதா, நீதிமன்ற உத்தரவு  வந்த உடனே நாங்கள் மெரினாவிற்கு விரைந்தோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் அங்கு சென்று, கருணாநிதிணின் உடலை அடக்கம் செய்வதற்கான  இடத்தை தேர்ந்தெடுத்து அதனை இறுதி செய்தோம்.பின்பு இயந்திரங்களை கொண்டு வந்து சுத்தம் செய்ய தொடங்கி, ஷாமியானா, விஐபிக்கள் வருகைக்கான ஏற்பாடுகள், போன்ற மற்ற ஏற்பாடுகளையெல்லாம் விரைவாக செய்ததாக கூறுனார்.

பின்னர் ராணுவமும் மின்னல் வேகத்தில் அங்கு வந்து சேர்ந்தது. எந்த இடத்தில் நின்று சல்யூட் செய்ய வேண்டும், எந்த இடத்தில் வாத்தியங்கள் முழங்கப்படும், துப்பாக்கிச் சூட்டிற்கான இடம் என்று அவர்களது ப்ரோட்டோகால் என்ன என்பதையும் முடிவு செய்யதனர்.

அனைத்தையும் படிப்படியாக ஒருங்கிணைத்தோம் என்று குறிப்பிட்ட அமுதா, 11 மணிக்கு எங்களுக்கு தீர்ப்பு தெரிய வந்தவுடன் பணிகளை தொடங்கிவிட்டோம், ஆனாலும் வெறும் 5 மணி நேரத்தில்  இதையெல்லாம் செய்தது கடினமாக இல்லை என்றாலும் பெரும் சவாலாக இருந்தது என்றார்.

மேலும்  கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்வில், அங்குள்ள பலரின் கவனத்தை ஈர்த்தவர் அமுதாதான். . வெள்ளை நிற  சுடிதார் அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்தார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணம் அறிந்து அவர்களை வரிசைப்படுத்தி இறுதிச் சடங்கு நிகழ்வினை கச்சிதமாக செய்து முடித்தார். அவரை தொலைக்காட்சி நேரலையில் பார்த்த பலரின் மனதிலும், யார் இந்தப் பெண் என்ற கேள்வி வந்து சென்றிருக்கும்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா கடந்த 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். திமுக, அதிமுக, ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார் இவர். தற்போது சென்னை உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

தொடர்ந்து பேசிய அமுதா கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் முன் அந்த சில நிமிடங்கள் தான் மிகவும் உணர்ச்சிகரமாக உணர்ந்ததாக தெரிவித்தார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்காக வருந்தினார்கள்.

அதே சமயத்தில் நான் தமிழகத்தை சேர்ந்தவள் என்பதால் நான் என் சிறு வயதில் இருந்து அவரை பார்த்து வந்துள்ளேன். ஒரு மாபெரும் மனிதர் இறந்துவிட்டார் என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது என்று தெரிவித்தார். ஒரு மாபெரும் தலைவருக்கு இறுதிப் பணிகள் செய்வதற்கு வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும்  அமுதா உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

ஆனாலும் இந்தப் பணி எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டபோது, முன் அனுபவம்தான் என கூறினார். ஆம், முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் உடல் அடக்கம் செய்வதற்கான பணிகளையும் அமுதாவே செய்திருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் இப்பணியை செய்து முடித்திருக்கிறார் அமுதா என்று சமூக ஊடகங்களில் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு