அமமுக பிரமுகர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எடப்பாடி பழனிசாமி... காலியாகும் டிடிவி.தினகரனின் கூடாராம்..!

By vinoth kumar  |  First Published Mar 13, 2023, 12:48 PM IST

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதில் இருந்தே கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.


அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதில் இருந்தே கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு அதிமுக கூட்டணி இடம் பெற்றிருந்த பாஜக முக்கிய பிரமுகர்களை எடப்பாடி பழனிசாமி தூக்கினார். இதனால், அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இது தமிழக அரசியலில் பரபரப்பான பேசப்பட்டு வந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய நிர்வாகிகளை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

இந்நிலையில், பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். நேற்று  அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதையும் படிங்க;-  பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி எச்சரித்த கடம்பூர் ராஜூ

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்நிகழ்வின்போது, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

click me!