ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... அமமுக வேட்பாளர் வாபஸ்!!

By Narendran SFirst Published Feb 7, 2023, 5:26 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வகையில் அமமுக கட்சி தங்களது வேட்பாளரால ஏ.எம்.சிவபிரசாந்தை அறிவித்தனர். இதை அடுத்து அமமுக சார்பில் சிவபிரசாந்த் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்திற்காகவே வேட்பாளர் வாபஸ்; ஓ.பி.எஸ். ஆதரவாளர் விளக்கம்

இந்த நிலையில் அமமுக கட்சி வேட்பாளர் சிவபிரசாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்னும் ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்.

இதையும் படிங்க: விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக!.. அலட்சிய போக்கு வேண்டாம் - தமிழக அரசி விமர்சித்த அண்ணாமலை!

அதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வாபஸ் பெற்றுள்ளார். ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செந்தில்முருகன் வாபஸ் பெற்ற நிலையில், தற்போது அமமுக வேட்பாளரும் வாபஸ் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!