எப்போ எழவு விழுமோ.. ஓபிஎஸ் என்னோட நண்பர், ஆனா ? - டிடிவி தினகரன் வைக்கும் சஸ்பென்ஸ் !

Published : Jun 19, 2022, 10:48 PM IST
எப்போ எழவு விழுமோ.. ஓபிஎஸ் என்னோட நண்பர், ஆனா ? - டிடிவி தினகரன் வைக்கும் சஸ்பென்ஸ் !

சுருக்கம்

AIADMK : இப்போது அதிமுகவில் பெரும்பாலான மாசெக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. 

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி என அதிமுகவின் பலம் குறைந்து வருவதால் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.   இருப்பினும் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.  இதனிடையே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். 

வருகிற செயற்குழு பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்தான தீர்மானத்தை இபிஎஸ் தரப்பு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் தொடர்ந்து தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார். இப்போது அதிமுகவில் பெரும்பாலான மாசெக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க : இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்

இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலையே காட்டுகிறது. கட்சிக்குள் பயங்கர குழப்பம் நிலவி வந்த போதிலும் எடப்பாடி அமைதி காப்பது ஏன் எனப் பலருக்கும் புரியவில்லை. இந்நிலையில் அமமுக பொதுச்செயாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுக ஒற்றை தலைமை பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘பன்னீர்செல்வம் என் நண்பர். அவர் இந்த அளவுக்கு வருத்தப்படக் கூடிய அளவுக்கு அங்கே ஏன் நிகழ்வுகள் நடக்கணும். அவரின் நண்பர் என்ற முறையில் தான் சொல்கிறேன் அரசியல் ரீதியாக செல்லவில்லை. 

அவர் வருத்தப்படக் கூடிய அளவுக்கு நிகழாமல் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கக் கூடிய அளவுக்கு நடக்க  வேண்டும்.  அதைத்தான் நான் விரும்புகிறேன்.  மற்றபடி இன்னொரு இடத்தில் எப்போது எழவு விழுமோ என்று காத்திருக்க கூடியவன் நான் கிடையாது. யூகமாக இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஒருவேளை முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தால் அப்போது பார்க்கலாம்.   எங்களை தேடி வரக்கூடிய அளவுக்கு ஓபிஎஸ் இல்லை.   அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் அப்போது பார்க்கலாம். இப்போதைக்கு நானாக எதையாவது சொன்னால் அது  அதிமுகவிற்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : ஒற்றை தலைமை சரியா இருக்கும்.. அதிமுகவுக்கு 'ஐடியா' கொடுத்த திமுக கூட்டணி கட்சி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!