அமமுக வேட்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி... உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்...!

Published : Mar 22, 2021, 12:26 PM ISTUpdated : Mar 22, 2021, 12:28 PM IST
அமமுக வேட்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி... உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்...!

சுருக்கம்

மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மன்னார்குடி தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதற்காக மன்னார்குடி பெரியார் சிலை அருகே நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால், டிடிவி தினகரன் மன்னார்குடி வரும்போது இரவு 10.15 மணியாகிவிட்டது. இதனால் சைகை மூலம் பிரச்சாரம் செய்த அவர், தேர்தல் அலுவலகத்தில் 4 தொகுதி வேட்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் கும்பகோணம் புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மன்னார்குடி வேட்பாளர் எஸ்.காமராஜ் தனது வீட்டிற்கு காரில் புறப்பட்டு செல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மன்னார்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நேற்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!