மா.சுவும் நானும் ஒன்றல்ல.. நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன்.. நெஞ்சை நிமிர்த்தும் சைதை துரைசாமி.

Published : Mar 22, 2021, 12:00 PM IST
மா.சுவும் நானும் ஒன்றல்ல.. நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன்.. நெஞ்சை நிமிர்த்தும் சைதை துரைசாமி.

சுருக்கம்

சாதி மதம் பார்க்காமல் 3500 மாணவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்த மனித நேயம். உலகிலேயே மிக சிறந்த சேவையை பாராட்டும் பக்கிங்காம் பேலஸ், இங்கிலாந்து அரண்மனையின் விருது பெற்றுள்ளேன். 

சைதாப்பேட்டை வேட்பாளருடன் என்னை ஒப்பிடுவதே தவறானது என்றும் மின்னுவதெல்லாம் பொன்னல்ல, நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன் என சைதை துரைசாமி கூறியுள்ளார். சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி இன்று காலை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பாரதி நகர்,ரேஸ் வியு காலனி, நரசிங்க புரம், மசூதிகாலனி, வண்டிக்காரன் தெரு, புது தெரு, காமராஜபுரம் அண்ணா கார்டன், கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சைதாப்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் உயர் பதவியிலும், அரசு பதவியிலும் இருப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும், இப்படி எண்ணற்ற ஏராளமான சேவைகளை இந்த தொகுதி மக்களுக்காக 45 ஆண்டு காலம் செய்து  இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார். சாதி மதம் பார்க்காமல் 3500 மாணவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்த மனித நேயம். உலகிலேயே மிக சிறந்த சேவையை பாராட்டும் பக்கிங்காம் பேலஸ், இங்கிலாந்து அரண்மனையின் விருது பெற்றுள்ளேன். என்னுடைய சேவையை இந்த தொகுதி மக்களும் அங்கிகரிப்பார்கள் என குறிப்பிட்டார். 

சைதை தொகுதியில் இரண்டு முன்னால் மேயர் என குறிப்பிடுவது தவறு நானும் அவரும் ஒன்றல்ல. அவர் மாமன்ற உறுப்பினரால் தேர்வு செய்யப்பட்டவர். நான் மக்களால் தேர்வு செய்யப்பட்டவன். 5 இலட்சத்து 19 ஆயிரம் வாக்குகளால் வெற்றிபெற்றேன். இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஒரே மேயர் நான். சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் முப்பத்து இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டவர்கள் கூடுதலாக வாக்களித்தனர். எனக்கு இடைவெளி என்பது இல்லை. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என குறிப்பிட்ட அவர், திமுக வேட்பாளர் மேயராக இருந்த போது 703 முறை மட்டுமே கள ஆய்வு மேற்கொண்டு உள்ளார். ஆனால் நான் 10 ஆயிரத்து நூறு முறை களஆய்வு செய்து இருக்கிறேன். திமுக வேட்பாளர் ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட பணிகள். தான் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டபணிகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். 

ஒப்பிடு என்பதே தவறான மாயை என குறிப்பிட்ட அவர், சட்டமன்ற உறுப்பினராக நான் அனைத்து நாட்களும் சென்றவன் என்ற பெருமையும், தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் அதிக கேள்வி கேட்டவன் என்ற ஹார்ட்ரிக் சாதனை படைத்தவன் நான், சட்டமன்ற உறுப்பினாராக எப்படி இருக்க வேண்டும் என்ற எடுத்துகாட்டாய் இருந்தேன். தற்போது அந்த வாய்ப்பு புதுபிக்கப்படுவதாக அவர் கூறினார். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது என்னுடைய தொலைபேசி எண் அனைவரிடமும் இருக்கும். எனவே மக்கள் என்னை எளிதில் தொடர்பு கொள்வார்கள். இவ்வாறு அவர் பேசினார். 

 

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!