பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறதா அமமுக? டிடிவி தினகரன் பதில்

By Velmurugan s  |  First Published Oct 20, 2023, 9:58 PM IST

எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அமமுக சார்பில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களின் சந்தித்தார். அப்போது பேசிய டிடிவி தினகரன், வினாஷ காலே விபரீத புத்தி என்பது போல் அழிய போகிறவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து பேசுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்ட அவர், துரியோதனன் கூட்டம் என்றைக்கும் ஜெயித்ததில்லை. அவர்கள் வீழ்வது உறுதி. 

எனக்கு தெரிந்து அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை. எந்த காரணத்தை கொண்டும் பழனிச்சாமி உடன் அமமுக ஒன்றிணைந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. ஓபிஎஸ் நடத்தும் நிகழ்ச்சியில் அழைப்பு வந்தால் அது குறித்து யோசிப்போம். செல்லூர் ராஜு அடுத்த பிரதமர் மோடி தான், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூறியது குறித்தான கேள்விக்கு, அவர் பேசியதற்கு நீங்கள் அவரிடம் தான்  கேட்க வேண்டும். அவர் ஒரு விஞ்ஞானி, விஞ்ஞானியின் பேச்சு சாதாரண மக்களாகிய நமக்கெல்லாம் புரியாது. 

Latest Videos

undefined

அதிமுக பெண் தலைவரை நிகழ்ச்சி முழுவதும் நிற்கவைத்துவிட்டு பெண் உரிமை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அமமுக, ஓபிஎஸ் நட்பு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல முறையில் தொடர்கிறது. பாஜக, அதிமுக பிரிவு குறித்தான கேள்விக்கு இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்தது தற்போது பிரிந்து விட்டது என்று தான் பார்க்க வேண்டும். அமமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் எங்களுடைய நிலைப்பாடுகளை உரிய நேரத்தில் தெரிவிப்போம் என்றார்.

click me!