மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்….  அப்ளிகேஷன் போட இன்னைக்கு கடைசி நாள் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 05, 2018, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்….  அப்ளிகேஷன் போட இன்னைக்கு கடைசி நாள் தெரியுமா?

சுருக்கம்

Amma scooter today the last date for application

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்று மாலை 5 மணிக்குள் அப்ளிகேஷன் கொடக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சராக இருந்த  ஜெயலலிதா வேலைக்கு செல்லும் பெண்கள் ‘ஸ்கூட்டர்’ வாங்கிக்கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர் மறைந்த பின்னர் ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ எனும் பெயரில் தமிழக அரசால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.



இத்திட்டத்தின்படி  பெண்கள் மானிய விலையில் ‘ஸ்கூட்டர்’ வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பங்கள் வழங்கத் தொடங்கி நாள் முதல் ஆயிரக்கணக்கான பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன்  விண்ணப்பங்களை பெற்றுச் செல்கின்றனர். அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்பதால், டிரைவிங் லைசென்ஸ் பெறவும் பெண்கள் கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலைமோதுகிறது.

இந்த நிலையில் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்களை  சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை மாலை 5 மணியுடன் இதற்கான கெடு முடிவடைகிறது.

எனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெண்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெறுவதற்கு கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



பெறப்பட்ட  விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி நாளை முதல்  10-ந் தேதி வரை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையில் ‘ஸ்கூட்டர்’ வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை  மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார

PREV
click me!

Recommended Stories

காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!
பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?