காமராஜர் சிலைக்கு ஆளுயர ரோஜா மாலை சாற்றி அமித்ஷா மரியாதை .. செட்டிகுளம் முதல் வேப்பமூடு வரை ரோடு ஷோ..

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2021, 3:10 PM IST
Highlights

மதியம் 12.50மணிக்கு வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு ஆளுயர ரோஜாபூ மாலை அணிவித்து அமித்ஷா மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்ஙளை பார்த்து கையசைத்த படி தலைக்குனிந்து வணங்கினார். 

நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா செட்டிகுளம் முதல் வேப்பமூடு வரை ரோடுஷோ மூலம் தொண்டர்களை உற்சாகபடுத்தினார். கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திற்கு குமரிமாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை நாகர்கோவில் வந்தார். பின்னர் கார் மூலம் சுசீந்திரம் சென்று தாணுமாலையன்சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

பின்னர் வீடு வீடாக சென்று மோடி அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தார். பின்னர் கார்மூலம் நாகர்கோவில் இந்துகல்லுரி அருகிலுள்ள நீலவேணியம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, செட்டிகுளம் ஜங்ஷனில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்த லாரியில் ஏறி சாலையின் இருபுறமும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே மக்களை சந்தித்தார். அமித்ஷாவுடன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன்,தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி ரவி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் ஆகியோர் உடன்வந்தனர். 

மதியம் 12.50மணிக்கு வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு ஆளுயர ரோஜாபூ மாலை அணிவித்து அமித்ஷா மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்ஙளை பார்த்து கையசைத்த படி தலைக்குனிந்து வணங்கினார். பின்னர் கார் மூலம் மணிமேடை வழியாக வடசேரி பஸ்ஸ்டாண்ட் பின்னால் உள்ள உடுப்பி ஓட்டலில் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.  

 

click me!