இது போலி வேட்பாளர் பட்டியல்.. யாரும் நம்ப வேண்டாம்.. பாஜக நாராயணன் திருப்பதி அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Mar 7, 2021, 2:02 PM IST
Highlights

சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பாஜக சட்டமன்ற  வேட்பாளர்கள் குறித்த 'போலி' பட்டியல் வலம் வந்து கொண்டிருக்கிறது என நாராயண் திருப்பதி கூறியுள்ளார்.

சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பாஜக சட்டமன்ற  வேட்பாளர்கள் குறித்த 'போலி' பட்டியல் வலம் வந்து கொண்டிருக்கிறது என நாராயண் திருப்பதி கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை குறைந்ததால் பெரும்பாலான தொகுதிகள் பாஜக விரும்பிய தொகுதிகளாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக உத்தேச பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், கே.டி.ராகவன் (மயிலாப்பூர்), நடிகை குஷ்பு (சேப்பாக்கம்), டால்பின் ஸ்ரீதரன் (வேளச்சேரி), எச்.ராஜா (காரைக்குடி), கேசவன் (காஞ்சிபுரம்), சக்கரவர்த்தி (திருத்தணி), கார்வேந்தன் (பழனி), ஏழுமலை (சிதம்பரம்), அண்ணாமலை (கிணத்துக்கடவு), வானதி ஸ்ரீனிவாசன் (கோவை தெற்கு), எல்.முருகன் (ராசிபுரம்), டாக்டர் பிரேம் (ஆத்தூர்), கருப்பு முருகானந்தம் (திருவாரூர்), தணிகைவேல் (திருவண்ணாமலை), கார்த்தியாயினி (வேலூர்), நரேந்திரன் (ஓசூர்), சிவமுருக ஆதித்தன் (தூத்துக்குடி), நயினார் நாகேந்திரன் (நெல்லை), நடிகை கவுதமி (ராஜபாளையம்), வினோஜ் பி.செல்வம் (துறைமுகம்) ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் ‘வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்’ என்ற தலைப்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. அதனை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் நடிகை குஷ்பு தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் மொபட் ஓட்டிச் சென்றார். வழியெங்கும் மேள தாளங்கள் முழங்க, பூக்கள் தூவி குஷ்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.ஆனால்,  இந்த வேட்பாளர் பட்டியலை நம்ப வேண்டாம் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயண் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பாஜக சட்டமன்ற  வேட்பாளர்கள் குறித்த 'போலி' பட்டியல் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வழக்கம் போல அகில இந்திய தலைமையால் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

click me!