புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் தனித்து போட்டியிடுவாரா? அல்லது திமுக அழைப்பை ஏற்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் தனித்து போட்டியிடுவாரா? அல்லது திமுக அழைப்பை ஏற்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த ரங்கசாமி கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை தங்களது கூட்டணியில் தொடர வேண்டுமென பாஜக, அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணிக்கு ரங்கசாமி தலைமை தாங்க வர வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளர் நாஜிம் அழைப்பு விடுத்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ரங்கசாமி வாய் திறக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ரங்கசாமியை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் இரண்டு நாள் கழித்து பேசலாம் என கூறி ரங்கசாமி அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்.
undefined
தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து விலகும் முடிவில் அவர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தனித்து போட்டியிடுவாரா? திமுக அழைப்பை ஏற்பாரா என்று தெரியவில்லை. இந்நிலையில், மாற்றுக் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை வளைக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு கதிர்காமம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார்.
இதேபோல் தட்டாஞ்சாவடி செந்திலும் என்.ஆர்.காங்கிரஸில் ஐக்கியமானார். இவர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் அமைச்சர்கள், மாற்றுக் கட்சி எம்எல்ஏக்கள் சிலரிடம் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு திரைமறைவு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. அவர்களும் காங்கிரஸில் வர பச்சைக்கொடி காட்டி விட்டதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தங்களது கட்சிகள் அவர் விருப்ப மனுக்களை அளிக்காமல் இருந்து வருவதால் சந்தேகம் வலுத்துள்ளது. எனவே அவர்களும் விரைவில் என்.ஆர்.காங்கிரவில் ஐக்கியமானதும் ரங்கசாமி தனித்து போட்டியிடும் முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.