குமரியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றிவேல் வீரவேல் முழக்கம்.. மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமித்ஷா..

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2021, 1:14 PM IST
Highlights

கன்னியாகுமரி சுசீந்திரத்தில் வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் பேரணியை துவக்கி வைத்து  அமித்ஷா  திறந்தவெளி வாகனத்தில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

கன்னியாகுமரி சுசீந்திரத்தில் வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் பேரணியை துவக்கி வைத்து  அமித்ஷா  திறந்தவெளி வாகனத்தில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றவேல் வீரவேல் என முழக்கமிட்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதனால் செட்டிகுளம் முதல் வேப்பமுடு பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

குமரி மாவட்டம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள பா.ஜ.க சார்பில் நடக்கும் விஜய யாத்திரா நிறைவு நிகழ்ச்சியில் இன்று மாலை கலந்துகொள்ள உள்ளார் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் கேரளா வந்தார். 

இந்நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் என்ற தலைப்பில் நடை பெறும் தேர்தல் பிரச்சாரத்த்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானம் வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலுக்கு சென்றார். அமித்ஷா வருகையை முன்னிட்டு குலை வாழைகள் நட்டு தோரணம் கட்டப்பட்டிருந்தது. மேலும் தெருக்களில் கோலங்கள் போடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.டி.ரவி தலைமையில் மேள தாளங்கள் முழங்க, கிராமிய நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து அவர் சுசீந்திரம் தாணுமாலையை ஸ்வாமி கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த திறந்த வெளிவாகனத்தின் மூலம் தெருக்கள் வழியாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக செட்டிகுளம் முதல் வேப்பமுடு பகுதியில் அவரை வரவேற்க ஆயிரக்கனக்கில் திரண்ட பாஜகவினர் வெற்றிவெல் வீரவெல் என முழக்கமிட்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் பொன்.ராதாகிருஷ்ணன்,  தமிழக டெல்லி அரசு சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இருந்தனர்.  

click me!