அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு.. வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் பேரணியில் ஆரவாரம்.

Published : Mar 07, 2021, 12:28 PM ISTUpdated : Mar 07, 2021, 12:34 PM IST
அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு..  வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் பேரணியில் ஆரவாரம்.

சுருக்கம்

குமரி மாவட்டம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். 

குமரி மாவட்டம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். 

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள பா.ஜ.க சார்பில் நடக்கும் விஜய யாத்திரா நிறைவு நிகழ்ச்சியில் இன்று மாலை கலந்துகொள்ள உள்ளார் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் கேரளா வந்தார். 

இந்நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் என்ற தலைப்பில் நடை பெறும் தேர்தல் பிரச்சாரத்த்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானம் வந்தார்.

 அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலுக்கு சென்றார். அமித்ஷா வருகையை முன்னிட்டு குலை வாழைகள் நட்டு தோரணம் கட்டப்பட்டிருந்தது. மேலும் தெருக்களில் கோலங்கள் போடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.டி.ரவி தலைமையில் மேள தாளங்கள் முழங்க, கிராமிய நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து அவர் சுசீந்திரம் தாணுமாலையை ஸ்வாமி கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த தெருக்கள் வழியாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து பொதுமக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் வாகனம் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!