மக்களே உஷார்..மீண்டும் டாப் கியரில் கொரோனா. கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் அவுட், 18,000 பேர் பாதிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2021, 12:05 PM IST
Highlights

இதற்கு முன்னர் நாட்டில் ஜனவரி 29 அன்று புதிய தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 18, 855 ஆக பதிவாகி இருந்தது. அதன்பிறகு அன்றாடம் புதிய நோயாளிகளின் அதிகரிப்பு 18 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது.  

பல வாரங்களுக்கு பின்னர் மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளாக சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய  தோற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய  சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் எண்ணிக்கை  1,12,10,799 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 36 நாட்களுக்கு பிறகு நாட்டில் கடந்த 24 மணி நேர இடைவெளியில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. அதேபோல் சென்னையிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் நாட்டில் மொத்த குரானா எண்ணிக்கை உயிரிழப்பு 157 756 ஆக உயர்ந்துள்ளது. 

இதற்கு முன்னர் நாட்டில் ஜனவரி 29 அன்று புதிய தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 18, 855 ஆக பதிவாகி இருந்தது. அதன்பிறகு அன்றாடம் புதிய நோயாளிகளின் அதிகரிப்பு 18 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேர இடைவெளியில் அதிகப்படியாக 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்ட 1,08,68,520  பேர் சிகிச்சை பற்றிய குணமடைந்துள்ளனர். மொத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு விகிதம் 96.95% ஆகவும், இறப்பு விகிதம் 1.41 சதவீதமாகவும் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்த பட்டியலில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாபைச் சேர்ந்தவர்களே அதிகம் ஆவர். 

நாட்டில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 656 பேர் இறந்ததாக பதிவாகியுள்ளன. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த 52,393 பேரும், தமிழகத்திலிருந்து 12, 513 பேரும் கர்நாடகாவில் இருந்து 12, 354 பேரும் டெல்லியில் இருந்து 10,918 பேரும், மேற்கு வங்கத்தில் இருந்து 10, 275 பெறும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 8, 729 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 7,172 பேரும் உள்ளனர். அதாவது கொரோனா தொற்று ஏற்பட்டு இணை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களே 70% பேர் உயிரிழந்ததாகவும்  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னையிலும் நோய்த்தொற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில்  225 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்று ஒரேநாளில் தமிழகத்தில்  543 புதிய வைரஸ்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிப்பதால் மட்டுமே வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 
 

click me!