எவ்வளவு கொடுமைகள் நடக்குது ? நீங்க ஒரு பெரிய மனுஷன்தானே ? வாயைத் திறந்து ஏதாவது சொல்லுங்க சார் !! அமிதாப்பை வம்பிழுக்கும் நடிகர் !!

Asianet News Tamil  
Published : May 03, 2018, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
எவ்வளவு கொடுமைகள் நடக்குது ? நீங்க ஒரு பெரிய மனுஷன்தானே ? வாயைத் திறந்து ஏதாவது சொல்லுங்க சார் !! அமிதாப்பை வம்பிழுக்கும் நடிகர் !!

சுருக்கம்

Amithab wil say something about rape issues told prakash raj

சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அமிதாப் பச்சன் போன்றவர்கள் அமைதியாக இருப்பது சரியல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது முகநூலில் பதிவு ஒன்றில் பிரகாஷ் ராஜ்,  நடிகர் அமிதாப் பச்சனுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் “நீங்கள் ஒரு பெரிய மனிதர்; உங்கள் குரலுக்கு அதிக மதிப்புள்ளது; தயவு செய்து பேசுங்கள்; பேசாமல் இருப்பதற்கு வயதும் முதுமையும்தான் காரணம் என்று பொய்யான காரணத்தை மட்டும் கூறி விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சமூகம் ஆபத்தில் இருந்தபோது நீங்கள் ஏன், அமைதி காத்தீர்கள்?என்று எதிர்காலத் தலைமுறை உங்களைப் பார்த்து கேட்டுவிடக் கூடாது” என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

மேலும், “நீங்கள் கவிதைகள்அறிந்த அற்புத மனிதர்; உங்கள்குரல் இப்போது தேவைப்படுகிறது; உங்களிடமிருந்து யாரும்எதையும் எடுத்துச் செல்ல முடியாது; மாறாக நீங்கள்தான் பலரைக் காப்பாற்றி வருகிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ள பிரகாஷ் ராஜ், “நாட்டில் நடக்கும் சம்பவங்களை கேட்கும் போதெல்லாம் நான் உடைந்து போகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நீங்கள் உதவிபுரியவில்லை எனில் அது சரியாகஇருக்காது; துயருக்கு உள்ளானவள் எனது மகள் அல்லது யாருடைய மகளாகவும் இருக்கலாம்; அதை மனத்திற் கொண்டாவது நீங்கள் கொஞ்சம் வாயைத் திறந்து பேச வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், “பெண் குழந்தைகளைக் காப்போம்” என்ற மத்திய அரசின் இயக்கத்திற்கு நல்லெண்ணத் தூதுவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!