உலகத்திலேயே கான்பூரும் குவாலியரும்தான் ரொம்ப ரொம்ப மோசம்…... மோடியின் ‘சுவச் பாரத்’தில் 14 அசுத்த நகரங்கள்….

 
Published : May 03, 2018, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
உலகத்திலேயே கான்பூரும் குவாலியரும்தான் ரொம்ப ரொம்ப மோசம்…... மோடியின் ‘சுவச் பாரத்’தில் 14 அசுத்த நகரங்கள்….

சுருக்கம்

14 Agly city in world is in India

உலக அளவில் மிகவும் அசுத்தமான20 நகரங்களின் பட்டியலில், முதலிரண்டு இடங்களில் இந்திய நகரங்களே இருக்கின்றன என்பதுடன், இந்தியாவிலிருந்து மட்டும் 14 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியில் ‘தூய்மை இந் தியா’ (ஸ்வச் பாரத்) திட்டம், எந்த லட்சணத்தில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதையும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ‘அசுத்தமான நகரங்களின் பட்டியல்’ அம்பலப் படுத்தி இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பானது, உலகம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து300 நகரங்களின் சுகாதாரம் தொடர்பாகஅண்மையில் ஆய்வு மேற்கொண்டது. மனிதர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்தி பெரும் பாதிப்புகளை தரக்கூடிய ‘பிஎம் 2.5’ அளவிற்கு காற்று மாசுநிலவுகிறதா? என்ற அளவுகோலின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.

அதனடிப்படையில், மோசமான சுகாதாரக்கேடு நிலவும் நகரங்களின் பட்டியல் ஒன்றும் தயாரிக்கப் பட்டது.இந்த பட்டியலில்தான், முதல் 20 நகரங்களின் பட்டியலில் மட்டும் 14 இந்தியநகரங்கள் இடம்பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது.

உலகிலேயே உத்தரப்பிரதேசத் தில் உள்ள, கான்பூர்தான் அதிக மாசுக்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் மத்தியப் பிரதேசத்தில் உள்ளகுவாலியரும், அதற்கு அடுத்தபடியாக குஜராத்தின் அகமதாபாத்தும் இடம் பெற்றுள்ளன.

பரீதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, தில்லி, லக்னோ, ஆக்ரா,முசாபர் நகர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பட்டியாலா, ஜோத்பூர் ஆகிய நகரங்களும் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இந்த நகரங்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருக்கும் நகரங்கள் என்பதுடன், 10-க்கும் மேற்பட்டவை பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் இருக்கும் நகரங்கள் என்பது முக்கியமானது.

அதேநேரம் முதல் 50 நகரங்களின்பட்டியலில், தென்னிந்தியாவைச் சேர்ந்த நகரம் ஒன்றுகூட இடம்பெறவில்லை. தென்னிந்தியாவில், கோவாவையும் சேர்த்து, இருக்கும் 6 மாநிலங்களில், ஒரு மாநிலத்தில் கூட காற்றுமாசுபாடு காணப்படவில்லை.

அதேபோல் அசுத்தமான நகரம் என்ற பெயரையும், இந்த மாநிலங்களில் உள்ள நகரங்கள் பெறவில்லை. இந்த 6-இல் 5 மாநிலங்களில் மாநிலக்கட்சிகள் ஆட்சி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இருக்கும் தெற்காசியாவில்தான் அதிகஅளவு காற்று மாசு ஏற்படுகிறது என்பதும், உலக அளவில் 34 சதவிகித காற்றுமாசு இந்த பகுதியில்தான் காணப்படுகிறது என்பதும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவாக இருக்கிறது.

பி.எம் 2.5-ல் குறியீட்டில் மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, சல்பேட், நைட்ரேட், பிளாக் கார்பன்ஆகியவை இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்றுடன் கலந்திருப்பதாக கூறும் அந்த ஆய்வு, இவற்றால் தொற்றாநோய்களான மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!