இது தான் அமித் ஷா வியூகம்..! திமுக வேட்பாளர்களை மூச்சு முட்ட வைக்கும் பாஜக..! அலறும் அறிவாலயம்..!

By Selva KathirFirst Published Mar 23, 2021, 10:45 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலுக்கு இரண்டு வார காலமே உள்ள நிலையில், திமுக வேட்பாளர்களால் பூத் கமிட்டிக்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பது அண்ணா அறிவாலயத்தை அலற வைத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இரண்டு வார காலமே உள்ள நிலையில், திமுக வேட்பாளர்களால் பூத் கமிட்டிக்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பது அண்ணா அறிவாலயத்தை அலற வைத்துள்ளது.

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த மறுநிமிடமே ஒவ்வொருவரையும் கண்காணிக்க வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை முடுக்கிவிட்டுள்ளது பாஜக. இதனை அடுத்து வேட்பாளர்களுக்கு விட்டமின் ப எந்த வழிகளில் வருகிறது என்பதை வருமான வரித்துறை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பிரபல நகைக்கடை, சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூலமாக திமுகவிற்கு தேர்தல் செலவுக்கு மிகப்பெரிய தொகை கை மாற இருப்பதை வருமான வரித்துறை மோப்பம் பிடித்தது. இதனை அடுத்தே அங்கு வருமான வரித்துறை ரெய்டு விட்டது. இந்த ரெய்டுக்கு பிறகு அந்த மூன்று இடங்களில் இருந்தும் திமுகவிற்கு வரவேண்டிய விட்டமின் ப அப்படியே முடங்கிவிட்டது.

இதே போல் வழக்கமாக தேர்தல் சமயத்தில் திமுகவேட்பாளர், அதிமுக வேட்பாளர் என்கிற வேறுபாடு இல்லாமல் தேர்தல் நிதியை வாரி வழங்கும் உள்ளூர் தொழில் அதிபர்களுக்கும் வருமான வரித்துறை செக் வைத்துள்ளது. தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்வே வரவு செலவு விவரங்களை கேட்டு அந்த தொழில் அதிபர்களுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. இதன் நோக்கம் திமுகவிற்கு உதவக்கூடாது என்பது தெரிந்து தற்போதைய தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வந்தால் அய்யாவுக்கு உடம்பு சரியில்லை, கொரோனா என்று கூறி தொழில் அதிபர் வீட்டு வாட்ச்மேன்களே திருப்பி அனுப்பி வருகின்றனர்.

பொதுவாக அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிலும் குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் ரேஸில் முன்னணியில் உள்ள பிரமுகர்கள் தேர்தல் செலவுக்கான பணத்தை அரசு காண்ட்ராக்டர்கள், உள்ளூர் தொழில் அதிபர்கள், பைனான்ஸ் செய்பவர்களிடம் கொடுத்து வைத்திருப்பது வழக்கம். அப்படித்தான் திமுக வேட்பாளர்களும் தேர்தலுக்கான செலவுக்கு தேவைப்படும் தொகையை பல நாட்களுக்கு முன்னரே ஏற்பாடு செய்து அதனை ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளனர். ஆனால் தற்போது நிழல் போல் சுற்றும் வருமான வரித்துறையால் பதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் திமுக வேட்பாளர்கள் திணற ஆரம்பித்துள்ளனர்.

அதிலும் வேட்பாளர்களை பொறுத்தவரை மூன்று விஷயத்திற்கு அதிகம் செலவாகும் ஒன்று தேர்தல் அலுவலகம் அமைப்பது, மற்றொன்று தேர்தல் பிரச்சாரம், பிறகு பூத் கமிட்டிக்கு பணம் கொடுப்பது. இந்த மூன்றுக்குமே விட்டமின் ப அவசியம். ஆனால் தற்போது முடக்கி வைத்துள்ள பணத்தை எடுக்க முடியாமல் திமுக வேட்பாளர்கள் மூச்சு முட்டிப்போய் உள்ளனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் எவ்வித சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் வருமான வரித்துறை திமுக வேட்பாளர்களை மட்டமே குறி வைத்து கண்காணிப்பதால் பூத் கமிட்டிக்கு பணம் எப்படி கொடுப்பது என்று தெரியாமல் திணற ஆரம்பித்துள்ளனர்.

தொகுதியில் திமுக வேட்பாளர்கள் பணம் இல்லாமல் திணறவது அறிவாலயத்தை எட்ட இதை கேட்டுஅங்குள்ள நிர்வாகிகள் கதற ஆரம்பித்துள்ளனர். அத்தோடு பூத் கமிட்டிக்கு திமுக மேலிடம் எப்போதும் கணிசமாக விட்டமின் ப வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த தேர்தல்களை போல் இல்லாமல் இந்த முறை தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே வழங்க திமுக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அத்தோடு திமுக வேட்பாளர்களை இப்படி மூச்சு முட்ட வைக்கும் அமித் ஷாவின் வியூகத்தை முறியடிக்க பிரசாந்த் கிஷோரோடு ஸ்டாலின் மருமகன் சபரிசன் இரவு பகலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

click me!