தேன்கூட்டில் கை வைத்த அமித்ஷா... குளவிகளாக கொட்டும் எதிர்க்கட்சிகள்..!

By vinoth kumarFirst Published Sep 16, 2019, 2:38 PM IST
Highlights

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேன்கூட்டில் கைவைத்துவிட்டார். ஆகையால், குளவிகள் கொட்ட ஆரம்பித்துவிட்டன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேன்கூட்டில் கைவைத்துவிட்டார். ஆகையால், குளவிகள் கொட்ட ஆரம்பித்துவிட்டன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். 

நக்கீரன் ஆசிரியர் கைதின் போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்ததாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இன்று நேரில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இந்த வழக்கில் வைகோ மீதான விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

பின்னர், வெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்தியை திணிக்க முயற்சிப்பதன் மூலம் தேன்கூட்டில் கைவைத்திருக்கிறார் அமித்ஷா குளவிகள் கொட்ட ஆரம்பித்துவிட்டன. இந்தியா என்ற உபகண்டம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றால் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். பட்டியலில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும்.

தமிழ்நாட்டிலேயே பேனர் வைக்கக்கூடாது என அறிவித்து அதனை செயல்படுத்திய கட்சி மதிமுக என்றார். இந்தி திணிப்பு முயற்சியை முறியடிப்போம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளதாகவும், தாங்களும், திமுகவும்கூட அதே முடிவையே எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

click me!