கடவுள்தான் காப்பாத்தணும்... பிறந்த நாளில் சிறைக்குள் ப.சிதம்பரம் புலம்பல்..!

Published : Sep 16, 2019, 02:17 PM IST
கடவுள்தான் காப்பாத்தணும்... பிறந்த நாளில் சிறைக்குள் ப.சிதம்பரம் புலம்பல்..!

சுருக்கம்

பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. வரும் 19-ந் தேதி வரை நிதீமன்ற காவலில் வைக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். ஏற்றுமதி ஆண்டுக்கு 20 சதவீத உயர்வு என்ற அளவில் இல்லாமல் எந்த நாடும் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வளர்ச்சியை எட்ட முடியாது.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 06.05 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. காஷ்மீர் விவகாரத்துக்கு பிறகு அரசின் கடைசி கவலையாக பொருளாதாரம் இருக்கிறது என்று பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!