அதிமுக- பாஜக இடையே தொடரும் மோதல்... திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை- அப்போ இன்றைய பாதயாத்திரை.?

By Ajmal Khan  |  First Published Aug 6, 2023, 7:22 AM IST

அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


அதிமுக- பாஜக மோதல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் தலைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து  பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. இந்த தேர்தல்களில் அதிமுகவிற்கு பின்னடைவே கிடைத்தது. இந்தநிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கும்- அதிமுக தலைவர்களுக்குள்ளும் மோதல் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் பாதை யாத்திரையை தொடங்கியுள்ளார்.

Latest Videos

undefined

அண்ணாமலை பாதை யாத்திரை

ராமேஸ்வரத்தில் தொடங்கிய பாதை யாத்திரையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக நடத்தப்பட்ட பாதை யாத்திரையில் அதிமுக தலைவர் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. இந்தநிலையில் அண்ணாமலை எங்களுக்கு முக்கியம் இல்லை, அவர் JUST LIKE தான். எங்களுக்கு மோடி.. அமித்ஷா ஜி தான் முக்கியம் என செல்லூர் ராஜூ பேசியது மேலும் பிரச்சனையை அதிகப்படுத்தியது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லையென கூறினார்.

டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை

இதற்கு சூடாக பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை தொட்டவன் கெட்டான் என அண்ணாமலைக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதிமுகவினரை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அண்ணாமலையை பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து அண்ணாமலை ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடை பயணம் இன்று நடைபெறுமா?

இதன் காரணமாக இன்று அண்ணாமலையின் பாதையாத்திரை நிறுத்தி வைக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அண்ணாமலையின் பாதையாத்திரை பயண திட்டத்தில்  இன்றைய தினம் ஏற்கனவே எந்த வித நடை பயணமும் இல்லாமல் ரிசர்வ் டேயாக உள்ளது. இதன் காரணமாக பாதை யாத்திரையில் எந்த பாதிப்பும் இல்லையென கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தை முடித்த பின்னர் நாளை அண்ணாமலையில் பாதை யாத்திரை தொடங்கும் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

ஜூலை 28ல் நடை பயணத்தை தொடங்கும் அண்ணாமலை..! எந்த பகுதியில் தொடங்கி எங்கே முடிக்கிறார்..? வெளியான பட்டியல்

click me!