AIADMK - BJP : பாஜகவுக்கு வாய்ப்பில்லை ராஜா.. கொளுத்திப்போட்ட அதிமுக தலைவர்கள்.. அட்டாக் மோடில் பாஜக

By Raghupati R  |  First Published Aug 5, 2023, 8:52 PM IST

தமிழகத்தில் சில நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணி இடையே பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.


மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் அதிமுக இப்பணிகளில் தீவிரமாக இருக்க, மற்றொரு பக்கம் அதிமுகவை பாஜக வம்பிழுத்து வருகிறது. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தில் அதிமுக குறித்து அவ்வப்போது சர்ச்சைகளை கொளுத்தி போட்டு வருகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

செல்லூர் கே.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியின் கூட்டணி உட்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப் படையில்தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார்.

அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் தலைவராகப் பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர், இன்றைக்கு அதி முகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறேன்.

Electric Scooters : ரூ.49 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 3 வருட வாரண்டி - முழு விபரம் இதோ !!

எனக்கு எல்லாப் பதவிகளும் படிப்படியாகத்தான் வந்தன. என்னைப் பொருத்தவரை அண்ணாமலையின் கருத்துகளை நான் பொருட்படுத்துவதில்லை. எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான். அதிமுகவை விமர்ச்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அவருக்கு பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், செல்லூர் ராஜூ இவ்வளவு நாட்கள் எப்படி அமைச்சராக இருந்தார் என்பது விநோதமாக உள்ளது. இதுபோன்ற பேச்சுக்களை அவர் இனிமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணாமலை கத்துக்குட்டியா ? செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா என்பது மக்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார். இது அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அதிமுக தான் வலிமையாக இருப்பதாகவும், அதிமுக வரும் தேர்தல்களில் வென்று ஆட்சி அமைக்கும் என கூறினார். மேலும், தமிழகத்தில் பாஜகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், கிறுத்துவர்கள், இஸ்லாமியர்கள் என எந்த பக்கமும் பாஜகவுக்கு ஆதரவு இல்லாதபோது பாஜக எப்படி ஆட்சி அமைக்க முடியும்.

கற்பனையையும், ஆசையையும் அண்ணாமலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எல்லாம் நடக்காது” என்று சர்ச்சையை தொடர்ந்துள்ளார் பொன்னையன். அதிமுக - பாஜக தலைவர்களிடையேயான இந்த பேச்சுக்கள் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. அரசியல் வட்டாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!