புதிய கட்சியை பாஜகவில் இணைக்கிறாரா அமரிந்தர் சிங்? பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!!

By Narendran SFirst Published Sep 16, 2022, 9:45 PM IST
Highlights

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது புதிய கட்சியை வரும் 19 ஆம் தேதி பாஜகவுடன் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது புதிய கட்சியை வரும் 19 ஆம் தேதி பாஜகவுடன் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து விலகினார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணையும் சசிகலா ? அய்யய்யோ, இல்லைங்க.! இது வேற மேட்டர்.. கே.பி முனுசாமி கொடுத்த சிக்னல்.!

இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) என்ற புதிய கட்சியை தொடங்கினார். மேலும் அந்த கட்சியுடன் பேரவை தேர்தலையும் எதிர்கொண்டார். தேர்தலில் அவர் தோல்வியடைந்த அடுத்த சில வாரங்களில் பஞ்சாப்  முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், பாஜகவில்  தன்னை இணைந்துக் கொண்டார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் சாதனைக்கு திராவிட ஸ்டிக்கர் ஒட்டுவது வேடிக்கையாக இருக்கிறது... திமுகவை சாடிய அண்ணாமலை!!

இந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி டெல்லி பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை அமரீந்தர் சிங் சந்திக்கிறார். அவர் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேர், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப் அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

click me!