அதிமுகவில் இணையும் சசிகலா ? அய்யய்யோ, இல்லைங்க.! இது வேற மேட்டர்.. கே.பி முனுசாமி கொடுத்த சிக்னல்.!

By Raghupati RFirst Published Sep 16, 2022, 9:14 PM IST
Highlights

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதன்பின்னர் இருதரப்பும் மாறி மாறி நீதிமன்றப் படிகளேறின. இந்த சட்டப் போராட்டங்களில் தற்போது வரை இபிஎஸ் கோஷ்டிதான் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதன்பின்னர் இருதரப்பும் மாறி மாறி நீதிமன்றப் படிகளேறின. இந்த சட்டப் போராட்டங்களில் தற்போது வரை இபிஎஸ் கோஷ்டிதான் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

அதிமுகவில் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகளிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலரும் படுகாயமடைந்தனர். இதனால் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

இதன்பின்னர் இருதரப்பும் மாறி மாறி நீதிமன்றப் படிகளேறின. இந்த சட்டப் போராட்டங்களில் தற்போது வரை இபிஎஸ் கோஷ்டிதான் வெற்றி பெற்றுள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்திருந்தார். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி முனுசாமி கலந்து கொண்டார். பிறகு செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், ‘ஆ.ராசாவின் பேச்சு பிறரின் மனதை புண்படுத்தும்படி, பிறரின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். குழந்தைகளுக்கு உணவு அளிப்பது வரவேற்கலாம். 

மேலும் செய்திகளுக்கு..உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !

ஆனால் ஆத்மார்த்தமாக இதனை மு.க ஸ்டாலின் செய்தாரா என்றால் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற ஆதங்கத்தில் ஒரு கூட்டம் தூண்டுதலின் பேரில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் சசிகலா உள்ளிட்டோரின் முயற்சி தோற்கடிக்கப்படும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் அந்த 4 பேர்.. கொடநாடு வழக்கில் பகீர் சம்பவங்கள்” - எடப்பாடிக்கு பயம் காட்டிய ஆர்.எஸ் பாரதி !

click me!