“அதிமுகவில் அந்த 4 பேர்.. கொடநாடு வழக்கில் பகீர் சம்பவங்கள்” - எடப்பாடிக்கு பயம் காட்டிய ஆர்.எஸ் பாரதி !

By Raghupati RFirst Published Sep 16, 2022, 8:40 PM IST
Highlights

தற்போது கொடநாடு வழக்கு சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் வகையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ‘ ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வயித்தெரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எந்தெந்த இடத்தில் பழனிசாமி என ஸ்டாலின் முன்னதாக சொன்னாரோ, அந்த இடத்தில் ஸ்டாலின் என fill in the blanks என்பது போல எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சி என்றாலே கோபதாபங்கள் மக்களுக்கு வரும். ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூடுகிற கூட்டம், மக்கள் தலைவராக ஸ்டாலின் இருப்பதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னோடு இருக்கும் தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ள ஆதாரமற்ற முறையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். சொத்து வரி உயர்த்தாவிட்டால் மத்திய சர்க்கார் சொல்லியதை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். நான் தொடர்ந்த வழக்கின் எதிரொலியாகவே அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வரி சீராய்வு செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரமே வேண்டாம் என பலபேர் சொல்லக்கூடிய நிலையை மறந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கட்டண உயர்வை நியாயப்படுத்தவில்லை, செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சினைகளை திசை திருப்பவே எடப்பாடி பேச்சு. தற்போது கொடநாடு வழக்கு சீரியசாக சென்று கொண்டிருக்கிறது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் வகையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொலைக் குற்றவாளியாக இருந்தவரை மந்திரியாக்கி, கோடி கோடியாக சம்பாதித்து வைத்திருக்கிறார். 

சசிகலா என்ற அம்மையார் இல்லையென்றால் முதலமைச்சர் ஆகியிருப்பாரா ? ஏழைப்பங்காளன் என்று சொல்கிறாரே. ரெய்டின்போது காட்டும் வீடுகளெல்லாம் எலிசபத் மகாராணி வீடு போல உள்ளது. நாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபித்திருக்கிறோம். அதிமுக விவாதிக்கத் தயாரா ? பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என மோடி அரசுக்கு தீர்மானம் போட தைரியம் இருக்கிறதா ?

மேலும் செய்திகளுக்கு..குழந்தை பிறப்பது எப்படி தெரியுமா? .. அக்கவுண்டன்சி ஆசிரியரை சிக்க வைத்த பள்ளி மாணவிகள் - திடீர் திருப்பம்

4 தலைமை உள்ளதாக சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இ பி எஸ், ஒ பி எஸ், சசிகலா, டிடிவியை மனதில் வைத்து 4 தலைமை என சொல்லியிருக்கிறார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் என நாங்கள் சொன்னதையே சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இதைத் தொடர்ந்தால் தெருதெருவாக தெருமுனைக் கூட்டங்களை நடத்தி பதிலளிக்கத் திமுக தயங்காது. இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் மெண்டல் ஆஸ்பிடலுக்கு போக வேண்டியதுதான்.  2 ஜியே பார்த்து சமாளித்து வந்தவர் ஆ ராசா. பெரியார் சொன்னதையே ஆ ராசா சொல்லியிருக்கிறார்.

உதயநிதி முப்பெரும் விழாவில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்விக்கு, உதயநிதி சட்டமன்ற உறுப்பினர், அண்ணா பிறந்த நாள் பணிகள் உள்ளது.  விருதுநகரில் நடைபெற்றது மாநாடு அல்ல முப்பெரும் விழா. நானே கெஞ்சிக் கேட்டதால் மேடையேறினேன் அவ்வளவு கூட்டம். வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி, ரொம்ப நாள் நிக்காது’ என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்தார் ஆர்.எஸ் பாரதி.

மேலும் செய்திகளுக்கு..உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !

click me!