சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டின் அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெறாமல் கொடுக்கம்பத்தை வைத்ததாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் தெரிவித்தனர்.
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டின் அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெறாமல் கொடுக்கம்பத்தை வைத்ததாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கொடிக்கம்பம் அகற்றிய போது ஜேசிபி வாகனம் சேதப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க;- அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் போறாங்க.. அலறி துடித்து மனு தாக்கல் செய்த மனைவி
இந்த சம்பவம் தொடர்பாக ஆபாசமாகப் பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- அண்ணாமலை ரைட் அண்ட் டை விடாமல் சுத்துபோடும் போலீஸ்.. அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாய்கிறதா?
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவிட்டார்.