ஓபிஎஸ்-ஐ பேச அனுமதித்தது ஜனநாயகம் மரபுகளை சீர்குலைக்கும் செயல்... ஜெயக்குமார் கண்டனம்!!

By Narendran SFirst Published Mar 24, 2023, 4:32 PM IST
Highlights

ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தது ஜனநாயகம் மரபுகளை சீர்குலைக்கும் செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தது ஜனநாயகம் மரபுகளை சீர்குலைக்கும் செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொண்டுவரும் மசோதா மீது ஒரு கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற மரபு விதி இருக்கிறது. அப்படி இருக்கையில் கூடுதலாக பன்னீர்செல்வத்தை பேரவை தலைவர் பேச அனுமதித்தது ஜனநாயகம் மரபுகளை சீர்குலைக்கும் செயல். முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில், பேசுவதற்கு வாய்ப்பு அளித்தேன் என பேரவை தலைவர் அளித்த விளக்கம் ஏற்புடையது அல்ல. ஒரே கட்சியில் மூன்று, நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்க முடியுமா?

இதையும் படிங்க: ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது ஏன்..? அண்ணாமலை பரபரப்பு தகவல்

அதிமுக அல்லாத உறுப்பினராக தான் பன்னீர்செல்வம் பேசினார் என்றால், இறுதியில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட மசோதாவை வரவேற்பதாக சொன்ன பன்னீர்செல்வத்தின் வார்த்தையை அவை குறிப்பில் இருந்து பேரவை தலைவர் நீக்காதது ஏன்? கிருஷ்ணகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் அதிமுக கிளை செயலாளர் என்று தவறான தகவலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் கொடுத்துள்ளதற்கு, அவர் மீது ஏன் உரிமை மீறல் கொண்டு வரக்கூடாது?

இதையும் படிங்க: அடுத்த பிளான்.!! ராகுல் காந்தியின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்.?

தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீதிமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவும் போது, மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? தவறான செய்தியை வெளியிட்டதாக தனியார் பத்திரிகை மீது உரிமை மீறல் கொண்டு வந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்த பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் திமுக அரசு கொடுத்துள்ள எச்சரிக்கை. அதிமுக பற்றிய கருத்துக்களை தெரிவித்து வரும் சசிகலாவுக்கு எவ்வித தார்மீக அடிப்படை உரிமையும் இல்லை. திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவர்கள் திமுக கூட்டணியை விட்டு விலகி விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

click me!