Why Rahul Gandhi disqualified as Lok Sabha MP ? : சாதாரண மனிதனுக்கு எப்படி சட்டம் பொருந்துமோ, அதே போல உயரிய குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்திக்கும் சட்டம் பொருந்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்
பிரதமர் மோடியை விமர்சித்து பேசியாதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொரடர்பட்டிருந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து நாடாளுமன்ற செயலாளர் உத்தரவிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்கிற பெயர் உள்ளவர்கள் கொள்ளையர்கள் என ராகுல் காந்தி குறிப்பிட்டார். இது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வந்துள்ளது. இதே போல ஒரு லட்சதீவு எம்பிக்கும் தீர்ப்பு வந்து எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டுள்ளார். இதே போலத்தான் ராகுல் காந்தி தற்போது பதவியை இழக்கிறார்.
அனைவருக்கும் ஒரே சட்டம்
சாதாரண மனிதனுக்கு எப்படி சட்டம் பொருந்துமோ, அதே போல ராகுல்காந்திக்கும் பொருந்தும், உயரிய குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் குடும்பத்தவருக்கும் சட்டம் பொருந்தும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு்ளது. அதே நேரத்தில் சட்டம் அணைவருக்கும் பொருந்தும். உங்களுக்கும் எங்களுக்கும் பொருந்தும். இரண்டு வகையாக தீர்ப்பு கொடுப்பார்கள் ஒன்று மேலுமறையீடு செய்யும் வரை தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள். மற்றொன்று மேல்முறையீடு செய்யலாம் ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படாது என தெரிவிப்பார்கள். அந்த வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி பேச்சால் பாஜக வளர்ச்சி
தண்டனை நேற்று முதல் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதா கூறினார். தீர்ப்பை செயல்படுத்தாவிட்டால் லட்ச தீவு எம்பிக்கு ஒரு நியாயம்.? சமாஜ்வாதி எம்பி அசாம் கான், பீகார் ஒரு நியாயமா என மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கும் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும். ராகுல் காந்தி பேசினால் தான் பாஜக இன்னும் வளர்ச்சி அடையும் என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
Breaking : எம்.பி., பதவியிலிருந்தி ராகுல் காந்தி நீக்கம்!