ஓபிஎஸ்சை பிரதானப்படுத்தி அவர் விரும்புகிற தொண்டர்களின் உரிமையை மீட்டுக் கொடுப்பதன் மூலம் மட்டுமே அதிமுகவின் பெரும்பகுதி வாக்குகளை பாஜக கூட்டணியால் அறுவடை செய்ய முடியும்.
பாஜக தன்னை பூதாகர கணக்குப் போட்டுக் கொண்டு கற்பனை கணக்கோடு அரசியல் விற்பனைக்கு முயன்றால் அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தையே தேர்தல் முடிவுகள் நிச்சயம் தரும் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான தனது முகநூல் பக்கத்தில்: பாஜகவின் வாக்கு வங்கி அண்ணாமலையின் நடைபயணத்தால் மூன்று சதவீதத்தில் இருந்து இரட்டிப்பாகி ஆறு சதவீதமாக உயர்ந்து விட்டதாகவே கற்பனை செய்து கொண்டாலும் அதோடு மோடி பிரதமராக வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்களின் ஆதரவால் அது ஏழு சதவீதமே ஆகி விட்டாலும் அந்த ஏழு சதவீதத்தோடு பாஜக சேர்த்து வைத்திருக்கும் வாசன், ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் உள்ளிட்ட தனிமனித ஆட்களின் சேர்க்கையால் அது எட்டு சதவீதத்தையே தொட்டு விட்டாலும்.. அதனால் என்ன பிரயோஜனம்.
இதையும் படிங்க: மேடையில் கப்பு வாங்காமல் கடைகளில் கப்பு வாங்கி தன்னை தானே பாராட்டிக்கொள்ளும் அண்ணாமலை- ஆர்.பி.உதயகுமார்
அண்ணா திமுகவின் பெரும்பகுதி வாக்குகளை தன் வசப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஓபிஎஸ்சை முன்வைத்து களமாடினால் மட்டுமே சுமார் முப்பது சதவீத அதிமுக வாக்குகளில் இருந்து சுமார் இருபது சதவீத வாக்குகளையாவது தங்களை நோக்கி தாமரை கட்சியால் ஈர்க்க முடியும் என்பதே கள யதார்த்தம் இதனுடன் டிடிவி. தினகரனின் அ.ம.மு.க.வும் அணிசேரும்போது மட்டும் தான் அது குறிப்பிட்ட தொகுதிகளின் வெற்றியை சாத்தியமாக்க முடியும் என்பதே உண்மை.
திமுக தனது கூட்டணியில் காங்கிரஸ் இரண்டு கம்யூனிஸ்டுகள் விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக் உள்ளிட்ட வாக்கு வங்கியை உறுதிப்படுத்திய கட்சிகளை உள்ளடக்கிக் கொண்டு ஏறத்தாழ ஐம்பது சதவீத வாக்குகளை தன்வசம் கொண்டிருக்கும் நிலையில் மேலும்.. எடப்பாடி அமைக்கும் மூன்றாவது அணி திமுகவுக்கு கூடுதல் வாய்ப்பை உருவாக்கும் சூழலில் இதனை தடுத்து பல தொகுதிகளின் வெற்றியை பாஜக பக்கம் திருப்ப வேண்டுமென்றால்.
இதையும் படிங்க: மோடி கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள்.. ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்காதது ஏன்.? வெளியான தகவல்
இதுநாள் வரை எடப்பாடிக்கு சகல வகையிலும் உதவி செய்து அவரை ஒற்றைத் தலைமை என்பதாக பிம்பப்படுத்தி பாஜக செய்து வந்த தப்பான அரசியலில் இருந்து அக்கட்சி தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு ஓபிஎஸ்சை பிரதானப்படுத்தி அவர் விரும்புகிற தொண்டர்களின் உரிமையை மீட்டுக் கொடுப்பதன் மூலம் மட்டுமே அதிமுகவின் பெரும்பகுதி வாக்குகளை பாஜக கூட்டணியால் அறுவடை செய்து பயனடைய முடியும் என்பதே நிஜம் இதற்கு மாறாக பாஜக தன்னை பூதாகர கணக்குப் போட்டுக் கொண்டு கற்பனை கணக்கோடு அரசியல் விற்பனைக்கு முயன்றால் அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியத்தையே தேர்தல் முடிவுகள் நிச்சயம் தரும் என மருது அழகுராஜ் பதிவிட்டுள்ளார்.