இன்றைக்கு திமுக தெருமுனை பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் என எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைக்கு காவு கொடுத்து விட்டார்கள் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி
முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு, அதிமுக அம்மா பேரவை சார்பில் அம்மா கோவிலில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார் . அப்பொழுது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தியாகத்தை எடுத்துச் சொல்லி உள்ளார்.
தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் வாழ்ந்து இருந்தாலும், இந்த இருபெரும் தலைவரின் சிறப்புகளைத்தான் கூறுகிறார்கள். இது அதிமுக தொண்டர்களுக்கும் அந்த பெருமையை சாரும். தியாகத்தில் மறுவடிவமாக உள்ள அன்னை தெரசாவே அம்மாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை நேரில் சென்று பாராட்டினார்.
அதிமுகவை தனிமைப்படுத்த முடியாது
அதேபோல் சுனாமி தமிழகத்தில் இருந்தபோது மின்னல் வேகத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அமெரிக்க அதிபர்
பாராட்டினார். குறிப்பாக கொரோனா காலகட்டங்களில் தடுப்பு ஊசி கண்டுபிடிக்க காலத்தில் கூட தடுப்பு மருந்து ஊசி இலவசம் என்று அறிவித்த ஒரே முதலமைச்சர் எடப்பாடியார் தான் என தெரிவித்தார். அதிமுகவை ஒரு போதும் தனிமைப்படுத்த முடியாது. கூட்டணி குறித்து எடப்பாடியார் விரிவாக சொல்லிவிட்டார். இன்றைக்கு திமுக தெருமுனை பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைக்கு காவு கொடுத்து விட்டார்கள்.நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக எடுத்து வைக்க தவறி விட்டார்கள்.
கடையில் கப்பு வாங்கிய அண்ணாமலை
மூன்று மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தின் ஜீவதார உரிமைக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார்கள். முதலமைச்சர் கண்மூடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கூட்டணிக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை காவு கொடுக்கிறார் என மக்கள் அச்சப்படுகின்றனர் என தெரிவித்தார். அதேபோல் அண்ணாமலை கப்பு வாங்கி விட்டோம் என்று சொல்கிறார் மேடையில் வாங்கினதா? கடையில் வாங்கினதா என்ற விவாதம் நடைபெறுகிறது .மேடையில் கப்பு வாங்கினால் தான் தமிழக மக்கள் பாராட்டுவார்கள் .கடையில் கப்பு வாங்கினால் கௌரவம் இருக்காது. கடையில் கப்பு வாங்கிக் கொண்டு மேடையில் வாங்கிவிட்டதாக பாராட்டை எதிர்பார்க்கிறார் . அது மக்களிடத்தில் எடுபடாது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதையும படியுங்கள்