பயமே வேண்டாம் தேமுதிகவை திமுக சீண்டாது ... பிஜேபிக்கு ஆறுதல் சொல்லும் அதிமுக!!

By sathish kFirst Published Feb 18, 2019, 3:45 PM IST
Highlights

பிஜேபியோ பாமக மற்றும் தேமுதிகவை நம்பி இருக்கும் நிலையில் அதிமுக அதைப்பற்றியெல்லாம் கவலைப் படவில்லையாம். காரணம், கடைசி நேரத்தில் கழட்டிவிட்டால் திமுகவோடு இணையாது, வேற வழியே இல்லை நம்மளோடு தான் கூட்டணி அமைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் அதிமுக.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழக முன்னணி கட்சிகளின் தலைமையில் கூட்டணி யார் யார் அமைக்கப்போகிறார்கள் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

திமுக கூட்டணியில் விசிக,மதிமுக,காங்கிரஸ் உழைத்த கட்சிகள் உள்ளன, அதிமுகவில் பாமக,பிஜேபி தேமுதிக என்ற பலம் பொருந்திய கட்சிகளும் இடம்பிடித்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளிலும் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்போகிறார்கள்?  என்ற தகவலும் வந்துகொண்டே இருக்கிறது.

அதிமுகவில் டீல் பேசும் தேமுதிக வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வாங்கி வைத்திருக்கிறது. அதே போல பாமகவும் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு வாக்குவங்கியை உயர்த்தியிருக்கிறது. இப்படி இரண்டு கட்சிகளும் சமபலத்தில் உள்ள போது, அதிமுகவில் தலா 4 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் தொகுதி உடன்பாட்டில் தால் கூட்டணியில் உள்ள பாமக மற்றும் தேமுதிகவுக்கு இடையே பல சிக்கல்கள் எழுந்துள்ளதாம்.

முதலில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளுக்கு சண்டைபோட்டுக் கொண்டிருந்த தேமுதிக, இப்போது சேலம் தொகுதியை கேட்டு அதிமுகவிற்கு பிஜேபி மூலமாக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாம்.  ஆனால் அதிமுகவோ சேலம் தொகுதியை விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனக் கறாராக இருக்கிறதாம். பிஜேபியோ பாமக மற்றும் தேமுதிகவை நம்பி இருக்கும் நிலையில் அதிமுக அதைப்பற்றியெல்லாம் கவலைப் படவில்லையாம். 

காரணம், கடைசி நேரத்தில் கழட்டிவிட்டால் திமுகவோடு இணைந்துவிடும் என்ற நிலையும் இல்லை என்பது அதிமுகவிற்கு நன்றாகவே தெரிந்த ஒன்று தான். அதனாலே விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை, ஒருவேளை கேட்கும் தொகுதியை கொடுக்கவில்லையென்றால் திமுக பக்கம் போய்விடுமே என்று பிஜேபி பயப்படும் அளவிற்கு எதுவும் நடக்காது திமுகவோ தேமுதிகவை சீண்டப் போவதில்லை என நம்புகிறது அதிமுக.  

அதற்கு காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மறைந்த கருணாநிதி விஜயகாந்துக்கு இறங்கி வந்து அழைப்பு விடுத்தும் அதை விஜயகாந்தும், பிரேமலதாவும் திமுகவை காக்கவைத்து கடைசி நேரத்தில் மக்கள் நல கூட்டணியோடு கூட்டு சேர்ந்து, திமுகவை தோற்கடித்ததை இன்னும் மறக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், அனைத்துக் கட்சிகளில் இருந்தும் தங்களுக்கு அழைப்பு வருகிறது எனக் கூறி வருகிறதாம் தேமுதிக.

click me!