ஐந்து கட்சிகளும் அதிமுகவே... மதிப்பு கொடுத்து வாய்ப்பளித்த எடப்பாடி பழனிசாமி..!

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2021, 3:16 PM IST
Highlights

அ.தி.மு.க.வில் பா.ம.க.வுடன் மட்டுமே தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. மற்ற பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் அதே நேரம், தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் குட்டிக் கட்சிகளுக்கு மதிப்பளித்து வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஆம், அ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. எனவே, இவர்கள் அனைவருமே அ.தி.மு.க.வினராகவே கருதப்படுவார்கள். என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. இந்த ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் வாக்குகள்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடியவை.

click me!