எம்.எல்.ஏக்கள் உடனே சென்னை வரவேண்டும்!!! - எடப்பாடி அதிரடியால் அசாதாரண சூழ்நிலை..!!

Asianet News Tamil  
Published : Apr 17, 2017, 08:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
எம்.எல்.ஏக்கள் உடனே சென்னை வரவேண்டும்!!! - எடப்பாடி அதிரடியால் அசாதாரண சூழ்நிலை..!!

சுருக்கம்

all mlas will come to chennai in tomorrow

அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் 122 பேரும் நாளை சென்னை வரவேண்டும் என அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அவசர அழைப்பு தமிழகத்தில் நிலவி வரும் அசாதர சூழ்நிலையை புரட்டி போடும் வகையில் அமையும் என தெரிகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா செயல்பட்டு வந்தார். அதையடுத்து முதல்வராக இருந்த ஒ.பி.எஸ்ஸின் பதவியை பறித்ததால் சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.

தொடர்ந்து அதுவரை இல்லாத துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி டிடிவி தினகரனை அமர வைத்தார் சசிகலா.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு டிடிவி தினகரனே பொதுச்செயலாளர் போன்ற தோரணையில் அனைத்து விதமான கட்சி விவகாரத்திலும் மூக்கை நுழைத்து செயல்பட்டு வந்தார்.

இது பெரும்பாலான அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கட்சியும் ஆட்சியையும் கையை விட்டு போக கூடாது என்பதற்காக அனைவரும் அமைதியை கட்டிக்காத்து வந்தனர்.

இது ஒருபுறம் இருக்க எட்டாக்கனியாக இருந்த முதல்வர் பதவி எடப்பாடிக்கு கிடைக்கவே அதை எப்படியாவது தக்கவைத்து கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் பனிப்போர் போன்று அவர் செயல்பட்டு வந்தார்.

அதாவது எதையும் கண்டும் காணமல் இருந்த இடம் தெரியாமல் நடந்து கொள்வது போல செயல்பட்டார் எடப்பாடி.

இதனிடையே சசிகலா அணிக்கும் ஒ.பி.எஸ் அணிக்கும்  இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தினகரன் தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற தினகரன் பணபட்டுவாடா செய்து பல தரப்பில் மாட்டிகொண்டார்.

இந்நிலையில், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க டி.டி.வி. தினகரன், சசிகலா கணவர் நடராஜன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்றனர்.

அங்கு தினகரனின் வலுக்கட்டயத்திற்கு காரணமாகவே இறுதி சடங்கிற்கு வந்ததாகவும் ஒ.பி.எஸ்க்கு அதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு இடையே காரசார பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இது போதாத குறைக்கு இரட்டை இலை சின்னதை பெற்று தர தினகரனிடம் லஞ்சம் வாங்கியதாக டில்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினகரனை கைது செய்ய டில்லி குற்றப்பிரிவு போலீசார் நாளை சென்னை வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள தினகரன் சசிகலாவை சந்தித்து ஆலோசிக்க பெங்களூர் சென்றுள்ளார்.

நேரம் கடந்து சென்றதால் இன்று சசிகலாவை அவரால் சந்திக்க முடியவில்லை. நாளையும் சந்திப்பது சந்தேகமே என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த கேப்பில் ஒ.பி.எஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் 122 பேரும் நாளை சென்னை வரவேண்டும் என அதிமுக தலைமை கழகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அவசர அழைப்பு தமிழகத்தில் நிலவி வரும் அசாதர சூழ்நிலையை புரட்டி போடும் வகையில் அமையும் என தெரிகிறது.

ஒ.பி.எஸ்ஸுடன் இணைவது குறித்த ஆலோசனை வலுவாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களும் உள்ளனர். அதனால் அனைத்து எம்.எல்.ஏக்களும் வருவார்கள் என்பது சாத்தியமில்லை.

இதை மறைப்பதற்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் பயணம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து எம்.எல்.ஏக்களும் போர்க்கப்பலில் பயணம் செய்து ஆக வேண்டும் என்ற சட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நெருக்கத்தில்... திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட 'சென்னை சூப்பர் 6' திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகள்!
சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!