
அதிமுக ஆட்சி நிலைக்கவும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒ.பி.எஸ்ஸுடன் இணைவது குறித்து சூசகமாக கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுக்கு நூறாக உடைந்துள்ளது. சசிகலா மற்றும் தினகரனால் தான் அதிமுக இவ்வளவு இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் பெருவாரியாக பேசப்பட்டு வருகிறது.
சசிகலாவின் பதவி ஆசையால் ஒ.பி.எஸ்ஸின் பதவி பறிபோனது. ஒ.பி.எஸ்ஸின் கோபத்தால் அதிமுக இரண்டாக பிரிந்தது.
இதனிடையே சசிகலாவின் துருதிஷ்டவசத்தால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஒ.பி.எஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட தினகரனை கட்சிக்குழு இழுத்தார்.
ஆனால் பதவி ஆசை யாரை விட்டது. தினகரனும் ஆட்சியையும் கட்சியையும் சிறப்பாக வழிநடத்தாமல் பதவிக்கு அடிகோல் இட்டார்.
அதற்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நின்றே தீருவேன் என ஒற்றை காலில் நின்றார்.
இரட்டை இலை சின்னத்திற்கு ஒ.பி.எஸ் தரப்பும் தினகரன் தரப்பும் போட்டியிட்டதால் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். மேலும் தினகரனின் பணபட்டுவாடாவால் தேர்தலையும் ரத்து செய்தது.
இதையடுத்து தினகரன் அதரவு அமைச்சரான விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் வீடுகள் அலுவலகங்கள் என 55 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபடவே கதிகலக்கத்தில் இருந்தார் டிடிவி.
இது போதாத குறைக்கு தினகரன் இரட்டை இலையை கைப்பற்ற புரோக்கர் ஒருவரிடம் 60 கோடிக்கு பேரம் பேசி கமிஷனாக 1.30 கோடி ரூபாய் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே வருமான வரித்துறையில் சிக்கிய விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்வதில் முதலமைச்சர் எடப்படிக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இதனால் எடப்பாடி தனி அமைச்சரவையை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒ.பி.எஸ்ஸுடன் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அதைதொடர்ந்து தற்போதும் தம்பிதுரை எடப்படியை சந்தித்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சி நிலைக்கவும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களுக்குள் பிளவு இல்லை. ஒ.பி.எஸ் தரப்பு இணைவது குறித்து பேசியுள்ளார். அவர் பேச்சுவார்த்தைக்கு வரும்போது ஒற்றுமையுடன் செயல்பட ஆலோசனை நடத்தப்படும்.
கட்சியில் மூத்த அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து தான் பேச்சுவார்த்தை நடத்துவோம். கட்சியில் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம்தான். அதை பெரிது படுத்த கூடாது என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மக்களுக்கு சொல்ல வர கருத்து என்னவென்றால் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"...