
அலங்கா நல்லூரில் போலீசார் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது என்று இடதுசாரி கட்சித்தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன் , முத்தரசன் கண்டித்துள்ளனர்.
ஜி.ஆர்: தமிழ்நாட்டில் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு நீக்காதது ஏன். தமிழக மக்களின் உணர்வை மதிக்காத மத்திய மாநில அரசுகளின் நிலைபாட்டால் தான் இந்த போராட்டம்.
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மறுக்கிறது, மாநில அரசு எப்படியாவது நடத்துவோம் என்று கூறி ஒன்றும் செய்யவில்லை.
முத்தரசன்.: அலங்காநல்லூர் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அமைதியான நிலையில் போராடுவது வரவேற்கத்தக்கது பாராட்டுகிறோம்.
அதே நேரத்தில் அவர்களுக்கு உணவு எந்த உதவியும் செய்ய கூடாது என்று போலீசார் தடுப்பது கண்டிக்கத்தக்கது.
மாணவர்கள் பொதுமக்கள் எழுச்சி மகிழ்ச்சி அளிக்கிறது பாராட்டத்தக்கது. தமிழக அரசு வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்ச்சனையாக பார்க்கிறதே தவிர அவர்களுடைய உணர்வை மதிக்க வில்லை. ஆயிரக்கணக்கில் போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.