போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் கவர்னர் மாளிகை முன் உண்ணாவிரதம் - பண்ருட்டி வேல்முருகன் பேட்டி 

 
Published : Jan 17, 2017, 02:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் கவர்னர் மாளிகை முன் உண்ணாவிரதம் - பண்ருட்டி வேல்முருகன் பேட்டி 

சுருக்கம்

இது பற்றி பண்ருட்டி வேல் முருகன் கூறியதாவது: 

இந்த போராட்டத்தை  ஒரு மனதாக ஆதரிக்கிறேன். ஜாதி மதம் கடந்து அமைதியான முறையில் அறவழியில் போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியுள்ளது.

தமிழ் சமூகம் வாழும் உரிமைக்காக போராடும் கூட்டத்தை அரசு இப்படி நடத்த கூடாது. அவர்கள் கேட்கும் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். திருவான்மியூரில் உள்ள பீட்டா அமைப்பு அலுவலகத்தை காலி செய்ய வேண்டும்.

அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அங்குள்ள கிராம மக்கள் உதவுவது வரவேற்க தக்கது. 

தமிழக காவல்துறையை கேட்டுகொள்வதெல்லாம், பக்கத்திலிருக்கும் கர்நாடக மாநிலத்தில் கூட மாணவர்கள் போராடுபபவர்களை காக்கின்றனர்.

ஆனால் நீங்கள் அவர்களை கடுமையாக தாக்குவது சரியா. காக்கி சட்டை போட்ட சகோதரர்கள் இதை கவனிக்க வேண்டும்.

உடனடியாக இது குறித்து முடிவெடுக்காவிட்டால் நானே நாளை கவர்னர் மாளிகைமுன்பு உண்ணாவிரதம் இருக்க நேரிடும் எனபதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு