ஒரே மாதத்தில் 2 ஆவது முறையாக துணை முதலமைச்சரான அஜித் பவார் !! மகாராஷ்ட்ரா அதிரடி !!

Selvanayagam P   | others
Published : Dec 30, 2019, 08:23 PM IST
ஒரே மாதத்தில் 2 ஆவது முறையாக துணை முதலமைச்சரான அஜித் பவார் !!  மகாராஷ்ட்ரா அதிரடி !!

சுருக்கம்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி என்று சொல்லி துணை முதலமைசசராக பதவி ஏற்றுக் கொண்ட அஜித் பவார் தற்போது சிவசேனா கூட்டணி சார்பில் மீண்டும் துணை முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.  

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், முதலமைச்சர்  பதவி பிரச்னையால் கூட்டணி உடைந்தது. இதனால், காங்., - தேசியவாத காங்., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றார். 

அவருடன் கூட்டணி கட்சிகள் உட்பட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகள் உட்பட பலர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத்பவாரின் சகோதரரான அஜித்பவார், துணை முதலமைச்சராக  பதவியேற்றார். இந்த மாதத்தில் 2வது முறையாக துணை முதலமைச்சராக  பொறுப்பேற்றுள்ளார். 

ஏற்கனவே, பாஜகவுடன்  கூட்டணி அமைத்து பதவியேற்று பின், பெரும்பான்மை இல்லாததால் ராஜினாமா செய்தார். முதலமைச்சர்  உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரே அமைச்சராக பொறுப்பேற்றார்.

அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சரான  அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான நவாப் மாலிக் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 

PREV
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்