கருப்பு -சிவப்பு மாஸ்க் அணிந்து வாக்களிக்க வந்த அஜித்... வதந்தி பரப்ப வலுவாக பிடித்துக் கொண்ட திமுக..!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2021, 10:36 AM IST
Highlights

ஜனநாயக கடமை ஆற்ற வந்த அஜித்தை திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை கண்டிக்கிறோம்

நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலியுடன் அதிகாலை 6.30 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். வரிசையில் நின்ற அவரை ரசிகர்கள் கூட்டம் மொய்த்ததால் போலீஸ் பாதுகாப்புடன் ஓரமாக நிறுத்தப்பட்டனர். கூட்டம் அதிகரித்ததால் அவரையும், அவரது மனைவியையும் முதல் ஆட்களாக வாக்களிக்க வைத்தனர் தேர்தல் அதிகாரிகள். 

இந்நிலையில் அவர் அணிந்திருந்த மாஸ் கருப்பு -சிவப்பு நிறத்தில் இருந்தது. இந்தப்புகைப்படங்களை பரப்பி திமுக தரப்பினர் அஜித் திமுகவுக்கு தான் வாக்களித்தார் என பரப்பி வருகின்றனர். இதுகுறித்து அஜித்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள், ‘’அஜித் எப்போதும் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டவர் இல்லை. அவர் தனது ரசிகர் மன்றத்தையே களைத்தவர். அவர் வாக்கு செலுத்த வருவது கட்சிக்காக அல்ல. அதிகாலையிலேயே வருவது ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் அவரது நோக்கம். மற்றபடி அவர் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தார் எனக்கூறப்படுவது எல்லாம் வதந்தியே.

ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடி நிறத்துடம் மாஸ்க் அணிந்து வந்தது எதார்த்தமானதே தவிர, அவர் அந்தக் கட்சிக்கு ஆதரவாக திமுக பரப்புவது வதந்தி. ஜனநாயக கடமை ஆற்ற வந்த அஜித்தை திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை கண்டிக்கிறோம்’’ என்கிறார் அவர்.

  

click me!