தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு.. தட்டி தூக்கிய திண்டுக்கல்.. தடுமாறும் சென்னை.. சத்யபிரதா சாகு தகவல்.

Published : Apr 06, 2021, 10:31 AM ISTUpdated : Apr 06, 2021, 10:32 AM IST
தமிழகத்தில் விறுவிறு வாக்குப்பதிவு.. தட்டி தூக்கிய திண்டுக்கல்.. தடுமாறும் சென்னை.. சத்யபிரதா சாகு தகவல்.

சுருக்கம்

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 14 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20 .23 சதவீத வாக்குகளும், நெல்லையில் 9. 98 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 14 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது  அலை பெருந்தொற்றுக்கு மத்தியில், தமிழக சட்டமன்றத் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் திட்டமிட்டபடி காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் காலை முதலே மக்களோடு மக்களாக வரிசையில் காத்து நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் விஜய், அஜித் ஆகியோரும் ஜனநாயக கடமை ஆற்றி உள்ளனர். பொதுமக்களும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 14 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20 .23 சதவீத வாக்குகளும், நெல்லையில் 9. 98 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார். சென்னையில் 11 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். இதேபோல அதிமுகவினர் டோக்கன் வழங்குவது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!