எய்ம்ஸ்  மருத்துமனை மதுரையில்தான் அமையும் !! அடித்துச் சொல்லும் இல.கணேசன் !!!

First Published Oct 19, 2017, 12:07 PM IST
Highlights
AIIMS Hospital in madurai...ila ganesan


மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை அருகே ஏற்கனவே தேர்ந்தெடக்கப்படட கப்பலூர் பகுதியில் அமைக்கப்படும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ்  மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை மாவட்டம் கப்பலூர், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி உள்ளிட்ட 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு,  மத்திய அரசுக்கு அறிவித்தது.

இதையடுத்து மத்திய குழு இந்த இடங்களை பார்வையிட்டுச் சென்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அவர் மறைவுக்குப் பிறகு பல அரசியல் குழப்பங்களால், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம்  பேசிய பாஜக எம்.பி. இல.கணேசன், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான அமைய உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவிடம்  பேசும்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்ததாக கூறினார்.

ஏற்கனவே மதுரை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், செங்கிப்பட்டி பகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என இல.கணேசன் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நில வேம்பு குறித்து கமலஹாசன் பேசியிருப்பதாகவும், அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.

tags
click me!