மருத்துவ கல்லூரி திறப்பு விழா அழைப்பிதழில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி இவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரில் புகைப்படங்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டு வருகிறது. அதில் திருவள்ளூர், நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை இன்று மோடி திறந்து வைக்க இருக்கிறார். ஒற்றை செங்கல் உதயநிதி, தமிழகத்தில் மோடிஜி 11 மருத்துவக்கல்லூரிகள் இன்று திறந்து வைக்கிறார். இந்நிலையில்தான், தேர்தல் பிரச்சாரத்தின் போது எய்ம்ஸ் குறித்து ஒற்றை செங்கல்லை எடுத்து காட்டி செய்த பிரச்சாரத்தை ஒப்பிட்டு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதாவது பாஜக ஆட்சியில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபப்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட போது, “மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்” என்று கூறி ஒரு செங்கலை காட்டினார்.
உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தனது பிரசாரக் கூட்டங்களில் எய்ம்ஸ் தொடர்பான செங்கல் பிரசாரத்தை அவர் மேற்கொண்டார். அடுத்த நாள் பிரசாரக் கூட்டத்தில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட இன்னொரு செங்கலை எடுத்து வந்த பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
இப்போது அந்த விவகாரத்தை வைத்து ஒற்றை செங்கல்லை எடுத்து காட்டினார் உதயநிதி ஸ்டாலின். இப்போது 11 மருத்துவகல்லூரிகளை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆகையால் அந்த செங்கல்லை திருடிய இடத்தில் வைத்து விடவும் என பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை உதயநிதி ஆதரவாளர்களோ, எங்கள் அண்ணன் உதயநிதி ஒற்றை செங்கல்லை தூக்கி காட்டியதால்தான் இப்போது தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரி கிடைத்திருக்கிறது. இது எங்கள் அண்ணனுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள். ஆனால் இரு தரப்பினரும் உணராத ஒரு விஷயம், எய்ம்ஸ் மருத்துவமனையின் வசதிகளும், கட்டமைப்பும், நிர்வாகமும், மாவட்ட மருத்துவ கல்லூரி வசதிகளும் திட்டங்களும் வெவ்வேறு என்பதை உணரவில்லை என்பதே உண்மை.
அடுத்து இன்று நடைபெறும் மருத்துவ கல்லூரி திறப்பு விழா அழைப்பிதழில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி இவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரில் புகைப்படங்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த விழாவில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் விழாவில் இடம்பெற உள்ளார். இதில் சாதாரண திமுக எம்.எல்.ஏவாக உள்ள ஒருவரது படம் இடம்பெற்றிருப்பத்தும், அந்த நிகழ்ச்சி நிரலில் உதயநிதியின் பெயரும் இடம் பெறாமல் அவரது புகைப்படம் வெளியாகி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.